- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் கான்ட்ராக்டர் நேசமணியை ரசிகர்கள் வெள்ளித்திரையில் காண வாய்ப்பு - விஜய் சூர்யா இணைந்து நடித்த...

மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணியை ரசிகர்கள் வெள்ளித்திரையில் காண வாய்ப்பு – விஜய் சூர்யா இணைந்து நடித்த அந்த படமும் ரி ரிலீஸ் என அறிவிப்பு!

- Advertisement -

நடிகர் வடிவேலு காமெடி நடிப்பில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். கடந்த 1990 காலகட்டத்தில் நடிகர் வடிவேலு காமெடி காட்சிகளுக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக ஓடின என்றால் அது மிகையல்ல. குறிப்பாக பிரசாந்த் நடித்த வின்னர் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும் அதில் கைப்புள்ள வடிவேலு காமெடி பெரிய அளவில் ஜெயித்தது.

கடந்த 2001ம் ஆண்டில் மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் பிரண்ட்ஸ். நடிகர் விஜய் சூர்யா இணைந்து நடித்த 2வது படம் இது. நடிகர் சூர்யா நடிகரான அறிமுகமான நேருக்கு நேர் படத்துக்கு பின் இந்த படத்திலும் விஜய் சூர்யா இணைந்து நண்பர்களாக நடித்திருந்தனர்.

மேலும் நடிகர்கள் ரமேஷ் கண்ணா வடிவேலு சார்லி நடிகைகள் தேவயானி விஜயலட்சுமி சரிதா மற்றும் ராதாரவி மதன் பாப் நடராஜன் ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் நடித்த நடிகர் வடிவேலுவின் காமெடி இன்றளவும் ரசிகர் மத்தியில் பேசப்படும் காமெடியாக உள்ளது.

இந்த படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் நடிகர் வடிவேலு, ஜமீன்தார் பில்டிங் பெயிண்டிங் வேலையை கான்ட்ராக்ட் எடுப்பதும் அங்கு விஜய் சூர்யா உள்ளிட்ட தனது அப்ரசண்டிகளை அழைத்துச் சென்று வேலை செய்ய வைப்பதும் அங்கு 200 ஆண்டுகள் பழமையான கூண்டு கடிகாரத்தை போட்டு உடைப்பது, அலங்கார விளக்கை உடைப்பது, வடிவேலு தலையில் சுத்தியல் விழுவது போன்ற பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன பழைய படங்களை பல ஆண்டுகளுக்கு பின்பு ரி ரிலீஸ் செய்து பெரிய அளவில் தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். சமீபத்தில் அப்படி வெளியான கேப்டன் பிரபாகரன் படம் அபாரமான வசூலை பெற்றது. அதே போல் கில்லி சச்சின் பாட்ஷா போன்ற படங்களும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.

இப்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிரண்ட்ஸ் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை டிஜிட்டல் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை விநியோகஸ்தர் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி காமெடியை வெள்ளித்திரையில் ரசிக்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

சற்று முன்