- Advertisement -
சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சிவக்குமார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அன்று நடிகர் சூர்யா சென்னையில் இல்லை. வெளியூரில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மழை பெய்து கொண்டிருந்த போது சென்னையில் உள்ள இசையமைப்பாளர் தேவா வீட்டுக்கு காரில் வந்த நடிகர் சூர்யா, பெய்த மழையில் குடை பிடித்தபடி நடந்து வந்து தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவிடம் துக்கம் விசாரித்தார். அங்கு இருந்த தேவாவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





