தமிழக அரசு சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடந்தது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக வெற்றிக்கரமான இசைப் பயணம், சிம்பொனி அரங்கேற்றம் உள்ளிட்ட சாதனைகளை செய்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்த பாராட்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு இந்தியா என்ற எல்லைகளை கடந்து ஒரு இசைக்கலைஞராக உலகம் முழுவதும் ரசிகர்களால் போற்றப்படுவர் இளையராஜா. எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அடுத்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கதைகளிலும்தான் நான் அதிசய மனிதர்கள் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் நான் நேரில் கண்ட அதிசய மனிதர் இளையராஜா. அவர் இசைக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இசைதான் அவரது உலகம். இந்த உலகத்துகு்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், இளையராஜா அண்ணாவுடன் 50 ஆண்டுகள் நான் பயணித்திருக்கிறேன். அதுபற்றிய என் உணர்வுகளை ஒரு பாட்டாக பாடுகிறேன் என்று மேடையில் அவரே ஒரு பாடலையும் பாடினார். தொடர்ந்து இளையராஜா ஏற்புரை வழங்கிய இளையராஜா, நன்றி தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா இதுவரை ரஜினி கமல் விஜயகாந்த் ராமராஜன் முரளி மோகன் என பலருக்கு இசையமைத்தாலும் கமல்ஹாசன் படங்களுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனம் கொடுப்பார். இதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போது தமிழக முதல்வர் முன்பும் அதை பதிவு செய்கிறேன் என்று கூறி கமல்ஹாசனை சீண்டிவிட்டார். இதை சிரித்தபடி கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருந்தார்.





