- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரீ ரிலீசாகும் விஜய் படம்... ட்ரைலரையே ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்... இது தளபதி டூ...

மீண்டும் ரீ ரிலீசாகும் விஜய் படம்… ட்ரைலரையே ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்… இது தளபதி டூ இளைய தளபதியாக மாறும் நேரம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரீ ரிலீஸ் செய்யப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால், தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர். தனுஷ் நடித்த மூணு திரைப்படம் அந்த சமயம் வெளியாகும் போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதே திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும்போது, இளைஞர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

இதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள், ரீ ரிலீஸ் வரிசையில் வர ஆரம்பித்தன. இதிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது கில்லி திரைப்படம். விஜய் நடிப்பில், தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் இந்த திரைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும்.

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில், அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மீண்டும் குவிய ஆரம்பித்தனர். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கில்லி திரைப்படம் கல்லா கட்டியது. எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையை ரீ ரிலீசில் செய்தது கில்லி.

அதாவது 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் திரைப்படத்தை மீண்டும் ரீலீஸ் செய்வதில் விநியோகஸ்தர்களும் சினிமா தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குஷி திரைப்படம் இணைந்து இருக்கிறது. 2000வது ஆண்டில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

எஸ் ஜே சூர்யா இதனை இயக்கி இருந்தார். அவரது இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக இது வெளிவந்தது. ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது. ஹீரோ ஹீரோயினுக்கு இடையேயான ஈகோவை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் எஸ் ஜே சூர்யா.

அந்த சமயத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சூழலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் 25ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

சற்று முன்