- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 15 கோடி சம்பளம் தர்றீயா, இப்பவே வில்லனாக நடிக்க நான் ரெடி - தமிழ்,...

ரூ. 15 கோடி சம்பளம் தர்றீயா, இப்பவே வில்லனாக நடிக்க நான் ரெடி – தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் வில்லனாக நடிக்க தயாராகும் நம்ம ஹீரோ

- Advertisement -

தமிழ் சினிமாவில், ஹீரோக்களுக்கான இடமே தனிதான். சம்பளத்திலும், இமேஜிலும், ஸ்டேட்டஸிலும் அவர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். சில படங்களில் எப்படியாவது முகம் காட்டி, மக்களின் மனதில் இடம்பிடித்து விட்டால் போதும், பிறகென்ன கோடி கோடியாக கொட்டும் பணமழையில் நனையலாம் என்ற பேராசையால், பலரும் சினிமாவுக்குள் வருகின்றனர்.

ஆனால், திறமையானவர்களுக்கு இது நியாயமான ஆசைதான். அதுதான் தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல் தொடர்ந்து போராடி, தங்களுக்கான இடத்தை பெற்று விடுகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு இன்று நல்ல நடிகர்களாக மக்கள் மனங்களில் இருப்பவர்கள்தான் யோகி பாபு, காளி வெங்கட், விஜய் சேதுபதி, முனீஸ்காந்த் போன்றவர்கள். இவர்கள் எல்லாம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சினிமா வாய்ப்புக்காக அலைந்த காலத்தில், மிகவும் கஷ்டப்பட்டவர்கள் என்பதை நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படி அடிமட்டத்தில் இருந்து வந்தவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில், கூட்டத்தில் ஒருவராக, அடியாட்களில் ஒருவராக நடித்தவர்தான். தென்மேற்கு பருவக்காற்று படம்தான் இவர் கதையின் நாயகனாக அறிமுகமான முதல் படம்.

பீட்ஸா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களால், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார். தொடர்ந்து ஹீரோவாக சேதுபதி ஐபிஎஸ், ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, காதலும் கடந்து போகும், காத்துவாக்குல ரெண்டு காதல், நானும் ரவுடிதான், கருப்பன் போன்ற படங்களில் நடித்து மக்கள் செல்வன் என அடைமொழி பெற்றார்.

- Advertisement -

ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி திடீரென பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். பிறகு, விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக மாறினார். இப்போது ஜவான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். ஹீரோ- வில்லன் என இரட்டை குதிரை சவாரி செய்யும் விஜய் சேதுபதி விரைவில் தெலுங்கிலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துவரும் ராம்சரண் அடுத்த புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் பவர்புல் வில்லன் கேரக்டருக்கு விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழ், இந்தியை தொடர்ந்து அடுத்து தெலுங்கிலும் வில்லனாக விரைவில் விஜய்சேதுபதி அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகலாம். அதே வேளையில், வில்லனாக நடிக்க தனது சம்பளம் ரூ. 15 கோடி என்றால், மட்டுமே சம்மதம் தெரிவிக்கிறார் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்