கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கூலி படம் மெகா சொதப்பலாக ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணி மாஸ் சம்பவமாக வேற லெவல் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இதெல்லாம் ஒரு படமா என்று விமர்சிக்கும் அளவுக்கு கூலி பிளாப் ஆகி விட்டது. ரஜினி ரசிகர்களுக்கே விரக்தியை ஏற்படுத்திய படமாக கூலி அமைந்து விட்டது.
இப்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்புதான் அவர் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார். அங்கு இப்போது முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் சிவராஜ்குமார் பாலையா மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் கேட்டுக்கொண்டதால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உடனே ஓகே சொன்னார். இதுவரை ரஜினி தனது படத்தின் 2ம் பாகத்தில் நடித்ததே இல்லை. ஜெயிலர் 2 தான் அவர் நடிக்கும் முதல் 2ம் பாகம் படமாகும்.
நெல்சனை பொருத்த வரை ஸ்கிரீன் ப்ளே தான் அவரது கைவந்த கலை. ஜெயிலர் படம் தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்சன் என்று விமர்சிக்கப்பட்ட போதிலும் ரஜினியை நடக்க வைத்தே அந்த படத்தை ஜெயிக்க வைத்து விட்டார். அனிருத் இசைதான் அந்த படத்தை ஒரேயடியாக தூக்கி நிறுத்தியது. தமன்னாவின் குத்தாட்டமும் ஓரளவுக்கு கை கொடுத்தது.
இப்போது ஜெயிலர் 2 படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். இன்னும் 6 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது. படப்படிப்பும் ஏறக்குறைய 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.
அதனால் வருகிற ஏப்ரல் 14ம் தேதி பொங்கலுக்கு ஜெயிலர் 2 ரிலீஸ் என்ற திட்டத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதில் முதல்கட்டமாக ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை முடித்துவிட்டு மற்ற முக்கிய நட்சத்திரங்களுக்கான காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த 2ம் பாகம் படத்திலும் ரம்யா கிருஷ்ணன்தான் ரஜினிக்கு மனைவியாக நடித்திருக்கிறார். அதில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





