- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் சிம்பு இணையும் ப்ராஜெக்ட் என்ன ஆனது தெரியுமா... எஸ்டிஆர் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்த...

வெற்றிமாறன் சிம்பு இணையும் ப்ராஜெக்ட் என்ன ஆனது தெரியுமா… எஸ்டிஆர் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்த புதிய தகவல்…

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சிலம்பரசனுக்கு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைப். கமல்ஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதனை படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் சிம்பு ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக, பார்க்கிங் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணா உடன் சிம்பு இணைவதாக அறிவிக்கப்பட்டது. டான் பிக்சர்ஸ் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. படத்தில் சந்தானம் மற்றும் கயாடு லோகர் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் விமர்சையாக நடைபெற்றது.

- Advertisement -

ஆனால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக சிம்பு தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி சென்று விட்டார். இப்படியான சூழலில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெற்றிமாறனுடன் கைகோர்த்தார் சிலம்பரசன்.

ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதன் பணிகள் மீண்டும் தள்ளிப் போனதால், தாணு தயாரிப்பிலேயே சிம்புவை வைத்து இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். இதன் ப்ரோமோ சூட்டிங் பணிகளும் நடைபெற்றன.

- Advertisement -

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன், வடசென்னை உலகத்தில் இந்த திரைப்படத்தை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது என்றும் அதே சமயத்தில் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் இதில் இருப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்காக தனுஷிடம் நான் என் ஓ சி கேட்டதற்கு அவர் பணம் கேட்டதாக சொல்லப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெளிவுபடுத்தி இருந்தார் வெற்றிமாறன்.

இது ஒரு பக்கம் இருக்க படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. ஏன் ப்ரோமோ வீடியோ கூட வெளியாகவில்லை. இதனால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டதா என்று ஐயம் எழுத நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ப்ரோமோ வீடியோவில் வி எஃப் எக்ஸ் பணிகளும் இருந்திருக்கிறதாம். தற்போது அதுதான் முடிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கான செட் ஒர்க் பணிகளும் நடைபெற்று வரும் சூழலில், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்