- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. கண்கள் கலங்கிய கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

ஜெயிலருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. கண்கள் கலங்கிய கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ரஜினிகாந்த்துடன் படத்தில் நடித்திருந்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் திரைப்படம் வெளியானதால் அதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். படம் இன்றுவரை பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றுவருகிறது. முக்கியமாக நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி ரஜினிகாந்த்துக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் ஒவ்வொரு சீனையும் ரஜினிகாந்த்துக்காக மாஸ் சீனாக எடுத்து தியேட்டரில் தீப்பிடிக்க வைத்திருக்கிறார் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்

அதேபோல் படத்தில் பெரிய ஸ்டார்களை பயன்படுத்தியதால் அவர்களுக்கான ஸ்கிரீன் ஸ்பேசை நெல்சன் திலீப் குமார் எப்படி கொடுத்திருப்பார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் இருந்தனர். அதனை மிக சிறப்பாகவே செய்து காட்டியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

சுனிலுக்கு இரண்டாம் பாதியில் காமெடி போர்ஷனை ஒதுக்கிவிட ஜாக்கி ஷெராஃபுக்கு சில சீன்களை ஒதுக்கிவிட்டார். அதே சமயம் படத்தில் ரஜினிகாந்த் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை தாண்டி ஸ்கோர் செய்தது இரண்டே பேர். அவர்களில் ஒருவர் மோகன் லால்; இன்னொருவர் சிவராஜ் குமார். அதிலும் சிவராஜ்குமாரை திரையில் பார்ப்பதற்கு அதகளமாக இருந்தது

கிளைமாக்ஸில் அவர் ரஜினியின் வீட்டுக்குள் வரும்போதும் , சேரில் அமர்ந்து டிஷ்யூ பேப்பரை வைத்துக்கொண்டே சம்பவம் செய்ததும் மாஸ் மொமென்ட்டுகளாக அமைந்தன அதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை நேற்று பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்தார் சிவராஜ்குமார். படத்தை பார்த்து முடித்துவிட்டு தன்னுடைய கார் அருகே வந்தபோது அங்கு இருந்த பலர் சிவராஜ்குமார் உடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். மேலும் சிவராஜ்குமார் குறித்து புகழ்ந்தபடி கோஷங்களையும் எழுப்பினர்.

இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சிவராஜ் குமார் திடீரென கண்கலங்கிவிட்டார். அதன் பிறகு உடனடியாக அங்கிருந்து கிளம்பியும்விட்டார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சிவராஜ்குமார் நடிப்பில் தமிழில் அடுத்ததாக கேப்டன் மில்லர் வெளியாக இருக்கிறது அதில் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயிலரில் ஒரு சில சீன்களிலேயே மாஸ் காட்டி விட்டார். எனவே கேப்டன் மில்லரில் மரண மாஸ் காட்டுவாரே என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்

சற்று முன்