- Advertisement -
Homeபொழுதுபோக்குராஜமவுலி டைரக்‌ஷனில் கூட நடிச்சுட்டேன்… ஆனா இவர் டைரக்‌ஷன்ல நடிக்கறது ரொம்ப கஷ்டம் - வெளிப்படையாக...

ராஜமவுலி டைரக்‌ஷனில் கூட நடிச்சுட்டேன்… ஆனா இவர் டைரக்‌ஷன்ல நடிக்கறது ரொம்ப கஷ்டம் – வெளிப்படையாக பேசிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் இட்லி கடை. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே நேற்று இட்லி கடை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இட்லி கடையை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குனர் தனுஷ் உருவாக்கி இருக்கிறார். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கோவையில் நேற்று இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கோவை பாஷையான கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை அசத்தினார். குறிப்பாக அவர் இட்லி கடை படத்தில் பணிசெய்த அனுபவம் குறித்து அவரது பாணியில் ஜாலியாக பேசி ரசிகர்களை கவர்ந்தார்.

இட்லி கடை டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நடிகர் தனுஷ் மிகவும் பண்பான ஒரு மனிதர். அவரைப் போலவே அவரது ரசிகர்களையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது ரசிகர்களும் சிறந்த பண்பாளர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

நான் ராஜமவுலி படத்தில் நடித்திருக்கிறேன். அவரது இயக்கம் உட்பட பல டைரக்டர்ஸ் படத்துல நடிச்சுப் பார்த்துட்டேன். ஆனால் நடிகர் தனுஷ் டைரக்‌ஷன்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டமுங்க. இப்படித்தான் நடிக்கணும் இந்த பக்கம் அந்தப் பக்கம் நகர முடியாதுங்க. ஆனால் ஒன்று மட்டும் தெரியுதுங்க. இட்லி கடை படம் பட்டைய கிளப்ப போகுதுங்க.இது கண்டிப்பாக தெரியுதுங்க.

சமீபமா நாம எத்தனை டிரெய்லர்கள் பார்த்திருக்கிறோம். எல்லாம் டமால் டுமீலாக தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த படம் இட்லி கடை டிரெய்லர் எப்படி இருக்குதுன்னு பாருங்க. ஒரு டைரக்டர் சிரிக்க வேண்டும் என்று காட்சி வச்சா ரசிகர்கள் சிரிக்கணும். அழுகணும்ன்னு காட்சி வச்சா படம் பாக்குற ரசிகர்கள் அழணும். எதிரி அடிக்கணும் போது கை தட்டனும்னா ரசிகர்கள் கை தட்டணும். அதுக்கு பெயர்தான் சினிமா. அதுதான் நம்ம இட்லி கடை படம் என்று நடிகர் சத்யராஜ் கோவை தமிழில் பேசி ரசிகர்களை வெகுவாக அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்