- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மேல அப்படி என்ன வன்மம்? நான் உழைச்ச சம்பாதிச்ச காசுல தான் உதவி பண்றேன்...

என் மேல அப்படி என்ன வன்மம்? நான் உழைச்ச சம்பாதிச்ச காசுல தான் உதவி பண்றேன் – நடிகர் கேபிஒய் பாலா வேதனை!

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களில் செலிபரட்டியாக பங்கேற்று வருகிறார். விளம்பர படங்களில் நடிக்கிறார். இதன் மூலம் தனக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்கிறார்.

சிறந்த கலைஞராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் அவர் பல்வேறு உதவிகளை செய்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு அடையாளத்தை அவர் பெற்றிருக்கிறார். சின்னத்திரை கலைஞராக இருந்த அவர் இப்போது சினிமாவிலும் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். இயக்குனர் ஷெஃரீப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த சூழ்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேபிஒய் பாலா குறித்து மிக மோசமாக விமர்சித்து கடுமையாக பேசியிருக்கிறார் அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் வருங்காலத்தில் கேபிஒய் பாலா பெரிய ஆபத்தை உண்டாக்கக்கூடியவர். இவருக்கு சர்வதேச அரசியல் தொடர்பு இருக்கிறது. இவர் ஆபத்தான நபராக உருவாகிறார். அவரது ஊடக செயல்பாடுகள் சென்டிமென்ட் பிரமோஷன்களாக இருக்கிறது. பெரிய அளவில் சமூகத்தையே தவறாக வழிநடத்தும் நிலை அவரால் ஏற்படும் என்று கடுமையாக கேபிஒய் பாலா குறித்து அவர் பேசியிருக்கிறார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் கேபிஒய் பாலா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, என்னை சர்வதேச கைக்கூலி என்று சொல்வது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது புதிதாக பைக் கொடுத்தது வரை அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது. ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்கு இத்தனை வன்மமா?

நான் நடிக்கும் படங்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பிரமோஷன் மற்றும் சினிமாவில் இருந்து வரும் வருமானத்தை வைத்துதான் நான் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். நான் மருத்துவமனை எல்லாம் கட்டவில்லை. புதிதாக ஒரு சிறிய கிளினிக் மட்டுமே திறந்து வைத்திருக்கிறேன். அதற்கான இடத்தை முன்பே வாங்கி விட்டேன். என் மீது அபாண்டமான பழி சுமத்துகிறார்கள் என்று அவர் கேபிஒய் பாலா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இதுவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்