- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை படம் அந்த பிரபலத்தோட வாழ்க்கை வரலாறு கதையா? ஆனா அதுல 2வது திருமணம்...

இட்லி கடை படம் அந்த பிரபலத்தோட வாழ்க்கை வரலாறு கதையா? ஆனா அதுல 2வது திருமணம் விவகாரமும் வருதா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் இட்லி கடை. வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. தனுஷ் நாயகனாகவும் நித்யா மேனன் நாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இட்லி கடை படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் டிரெய்லர் கோவையில் நடந்த விழாவில் வெளியீடு செய்யப்பட்டது.

இட்லி கடை படத்தில் ராஜ்கிரண் பார்த்திபன் சத்யராஜ் மற்றும் அருண்விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் சென்டிமென்ட் பேமிலி டிராமாவாக இருப்பது டிரெய்லர் மூலம் உறுதியாகி விட்டது. இட்லி கடையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குனர் தனுஷ் உருவாக்கி உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே நடிகர் தனுஷ் ராஜ்கிரண் கதையின் நாயகனாக நடித்த ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார். இதுதான் தனுஷ் இயக்கிய முதல் படம். இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். அதில் பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் வயது ராஜ்கிரண் கேரக்டரில் தனுஷூம் இளம் வயது ரேவதி கேரக்டரில் மடோனாவும் நடித்திருந்தனர்.

இப்போது மீண்டும் தனக்கு விருப்பமான நடிகர் ராஜ்கிரணை இட்லி கடை படத்தில் தனது அப்பா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு மனைவியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சாதாரண இட்லி கடை பின்னாளில் பெரிய ஓட்டலாக மாறுவதுதான் கதை என்று டிரெய்லர் பார்த்தாலே தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறு கதைதான் இட்லி கடை படமாக உருவாகி இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜின் அப்பா தங்கவேலு ஆரம்பத்தில் சிறிய ஓட்டல் நடத்தியவர். பிறகு அவரது மகன் மாதம்பட்டி ரங்கராஜூம் சமையலில் ஆர்வம் காட்டி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றார். மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமானார்.

சமையல் கலைஞராக மாதம்பட்டி ரங்கராஜ் வாழ்க்கையில் பிரபலமான கதை தான் இட்லி கடை படத்தின் கதை. அதையே டிரெய்லரில் வரும் காட்சிகள் வெளிப்படுத்துகிறது என்று ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்ததாக விவகாரம் பூதாகரமாகி விட்டதே, அதுவும் இட்லி கடை படத்தில் வருகிறதா, இன்னொரு கதாநாயகி யார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்