தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியவர் நடிகர் ரவி மோகன். அவர் நடித்த ஜெயம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி சந்தோஷ் சுப்ரமணியம் தனி ஒருவன் பேராண்மை போகன் டிக்டிக்டிக் மிருதன் அடங்க மறு நிமிர்ந்து நில் என பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
ஆனால் ஒரு காலகட்டத்துக்கு பிறகு நடிகர் ரவிமோகன் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. குறிப்பாக அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன.
இதற்கிடையே அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளும், அவரது மனைவி ஆர்த்தியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாடகி கெனிஷாவுடன் அவர் நெருங்கிய நட்பில் இருப்பதும் சர்ச்சையை கிளப்பியது.
எனினும் அவருக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நடிகர் ரவி மோகன், யோகிபாபு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை அவரே தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அவரே டைரக்ட் செய்கிறார். எஸ்ஜே சூர்யாவுடன் நடிகர் ரவி மோகன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தையும் அவரது நிறுவனமே தயாரிக்கிறது.
ஏற்கனவே நடிகர் ரவி மோகன் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை கணேஷ் கே பாபு டைரக்ட் செய்து வருகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவு கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகி விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது படத்தின் நடிகர் ரவி மோகன் நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. அவர் தயாரிப்பாளராக இயக்குனராக பிஸியாக இருப்பதால் கால்ஷீட் ஒதுக்காமல் இருந்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரம் நடக்காததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை 2026ம் ஆண்டுக்கு படக்குழு தள்ளி வைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ கால்ஷீட் கிடைக்காததாலும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததாலும் கராத்தே பாபு ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.





