- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவின் பாதுகாப்பு போலீஸ்காரரிடம் மோசடி, சூர்யா வீட்டு வேலைக்கார பெண்கள் உள்ளிட்ட 4 பேர்...

நடிகர் சூர்யாவின் பாதுகாப்பு போலீஸ்காரரிடம் மோசடி, சூர்யா வீட்டு வேலைக்கார பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது – நடந்தது என்ன, வெளியான திடுக் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்த கருப்பு படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவர் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தி நகர் ஆற்காடு தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அந்த வகையில் சூர்யாவிடம் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ் காரராக அந்தோணி ஜார்ஜ் பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் சூர்யாவிடம் நான் கடந்த 4 ஆண்டுகளாக தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறேன். சூர்யா வீட்டில் சுலோச்சனா (47 வயது) என்பவரும் அவரது தங்கை விஜயலட்சுமி (38 வயது) என்பவரும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னிடம் குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கி தருவதாக ஆசை காட்டினார்கள்.

சுலோச்சனாவின் மகன்கள் பாலாஜி (25 வயது) பாஸ்கர் (23 வயது) மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகியோர் குறைந்த விலையில் தங்க நாணயம் சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் பணம் கட்டுமாறு என்னை கேட்டார்கள். நான் முதலில் 1.92 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். அந்த பணத்தை எனது தந்தையின் புற்றுநோய் சிகிச்சை செலவுக்காக கடனாக வாங்கி வைத்திருந்தேன்.

அதற்கு முதலில் 30 கிராம் தங்க நாணயங்களை அவர்கள் எனக்கு கொடுத்தனர். இதனால் நான் தொடர்ந்து படிப்படியாக வங்கி கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் 50 லட்சம் ரூபாய் வரை அவர்களிடம் கொடுத்தேன். முதலில் 30 கிராம் தங்க நாணயம் கொடுத்த அவர்கள் பின்னர் தங்க நாணயம் எதுவும் கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டனர். நான் கொடுத்த பணத்தில் 7.91 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்தார்கள்.

மீதி 42 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த புகார் மனு தொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்ட நடிகர் சூர்யா வீட்டு வேலைக்கார பெண்கள் சுலோச்சனா விஜயலட்சுமி சுலோச்சனாவின் மகன்கள் பாலாஜி பாஸ்கர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நட்சத்திர நடிகர் சூர்யா வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்