புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குடும்ப வறுமை காரணமாக இளம்வயதிலேயே நாடகங்களில் நடிக்க வந்துவிட்டார். அதாவது நாடக சபாக்களில் அவர் நடிக்க வந்த காலகட்டத்தில் மிகவும் இளம் வயது வாலிபராக தான் இருந்தார். பல மேடை நாடகங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். சில நாடகங்களில் பெண் வேடமிட்டும் அவர் நடித்திருக்கிறார்.
ஆனால் கருப்பு வெள்ளை படங்களில் அவர் இளைஞராக நடித்த படங்களில் அவரது இளமையான தோற்றம் பார்ப்பவர்களை எல்லாம் மயக்கும். பெரிய நடிகராக அவர் தமிழ் சினிமாவில் உருவான பிறகு நாடோடி மன்னன் என்ற படத்தை அவரே தயாரித்து டைரக்ட் செய்தார். இந்த படம் பாதி வரை கருப்பு வெள்ளை படமாகவும், இடைவேளைக்கு பிறகு ஈஸ்ட்மென் கலர் படமாகவும் வெளியானது.
இந்த படத்தில்தான் கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி அறிமுகமானார். நாடோடி மன்னன் படத்தில் சாரங்கன் என்ற கேரக்டரில் வரும் நாடோடி எம்ஜிஆருக்கு பானுமதி ஆரம்பத்தில் காதலியாக இருப்பார். அவர் இறந்த பிறகு சரோஜா தேவி அவருக்கு ஜோடியாக வருவார்.
அதன்பிறகு ஏராளமான படங்களில் எம்ஜிஆர் நாயகனாக நடித்தார். ஆனால் அவர் 50 55 வயதுகளை கடந்த பிறகும் ஹீரோவாக இளமையான தோற்றத்தில் நடித்தார். ஆனால் இப்போதைய ரஜினி கமல் போல எம்ஜிஆரின் வாலிப தோற்றம் அவ்வளவு வெளிப்படையாக தெரியாது. ஓரளவுக்கு இளைஞர் போன்ற தோற்றத்தில் அவர் பொலிவாக காணப்படுவார்.
எனினும் அவருக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா லதா சரோஜா தேவி மஞ்சுளா என பல நடிகைகள் அவரை விட 20 முதல் 25 வயதுகள் வரை குறைவானவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்களுடன் எம்ஜிஆர் டூயட் பாடி காதல் காட்சிகளில் நடித்தார். அந்த படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் எம்ஜிஆர் ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்த போது, வயதான காலத்திலும் இளமையான தோற்றத்தில் நடிக்கிறீர்களே என்று சிக்கலான ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் அசராமல் பதில் சொன்ன எம்ஜிஆர், 20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா? அதே போல் 50 வயது கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்க கூடாது, அதுதானே நடிப்பு? என்னை திரையில் பார்க்கும் போது நான் இளைஞனாக தோன்றுகிறேனா இல்லையா என்பதுதான் என் கேள்வி என்று தன்னிடம் கேள்வி கேட்டவரையே திருப்பிக் கேட்டு மடக்கியிருக்கிறார் புரட்சித் தலைவர்.





