இந்திய சினிமா வரலாற்றில் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடி திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளது. ஏற்கனவே ராமராஜன் நளினி, பார்த்திபன் சீதா கமல் சரிகா அஜய் தேவ்கன் கஜோல் கௌதம் கார்த்திக் மஞ்சரி என பல நட்சத்திர ஜோடிகள் திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள்தான். மிக விரைவில் நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா மண வாழ்க்கையில் இணைய உள்ளனர்.
வக்கீல் டாக்டர் போலீஸ் என அந்தந்த துறை சார்ந்த பலரும் அந்த துறை சார்ந்தவர்களையே தங்களது வாழ்க்கை துணையாக திருமணம் செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில் சினிமாவிலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் அல்லது நடிகையே காதலித்து பிறகு திருமணம் செய்துகொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி மலையாளம் கன்னட சினிமாவிலும் பல நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றன.
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நேஷனல் கிரஷ் நடிகை ராஸ்மிகா மந்தனாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகர் விஜய் தேவரகொண்டா – ராஸ்மிகா மந்தனாவின் காதல் பயணம் ரீல் வாழ்க்கையில் தொடங்கி ரியல் வாழ்க்கையை எட்டியுள்ளது. அவர்கள் இருவரும் முதன்முறையாக கீதா கோவிந்தம் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர்.
இந்த படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரசுராமன் இயக்கிய இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் போதுதான் இருவருக்கும் இடையே காதல் துளிர் விட ஆரம்பித்தது. இதையடுத்து 2019ம் ஆண்டில் வெளியான டியர் காம்ப்ரேட் என்ற படத்தில் ராஸ்மிகா விஜய் தேவரகொண்டா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.
டியர் காம்ரேட் படத்துக்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 3ம் தேதியன்று குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
வழக்கமாக திருமணத்துக்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவது இல்லை. மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா ரெட்டியை ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு ராஷ்மிகா நடிக்க வருவது சந்தேகம்தான் என்பதால், நேஷனல் கிரஷ் நடிகை இனி நடிப்பை விட்டு விலகி விடுவாரா என அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.





