- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலியின் தி எபிக் திரைப்படம் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா... அடேங்கப்பா தாங்குவார்களா ரசிகர்கள்...

பாகுபலியின் தி எபிக் திரைப்படம் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா… அடேங்கப்பா தாங்குவார்களா ரசிகர்கள்…

- Advertisement -

தெலுங்கு சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படமாக அமைந்ததுதான் பாகுபலி. ஆந்திரா தெலுங்கானா மட்டும் அல்லாமல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் ரீச் ஆன பாகுபலி திரைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏற்கனவே நான் ஈ எனும் திரைப்படத்தை கொடுத்து அசத்தியிருந்த ராஜமௌலியின் கை வண்ணத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. திரைக்கதையில் விறுவிறுப்பையும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக 500 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் குவித்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கட்டப்பா பாகுபலியை குத்திக் கொலை செய்ய, அதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாகவே இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை சரியாக புரிந்து கொண்டு, கச்சிதமாக திரைக்கதையை அமைத்து பாகுபலி இரண்டாம் பாகத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் ராஜமௌலி. படத்தின் ஒரு காட்சி கூட போர் அடிக்காமல் அவர் எடுத்திருந்தார்.

இதன் காரணமாக எதிர்பார்த்ததை விட பல மடங்கு மேலே, அற்புதமாக அமைந்தது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம். 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், ஆயிரம் கோடி அளவுக்கு வசூல் குவித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜமவுலிக்கு மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது. இப்படியான சூழலில் அந்த திரைப்படத்திலிருந்து பாகுபலி தி எபிக் எனும் பாகத்தை வெளியிட இருக்கிறார்கள்.

- Advertisement -

பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை சேர்த்து வைத்து இது வெளியிடப்படுகிறது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெளியான போது பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திரையரங்குகளில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி படத்தின் முதல் பாகம் முதல் பாதியாகவும் இரண்டாம் பாகம் இரண்டாம் பாதியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். வரும் 31 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில் அந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வளவு நீண்ட நேர திரைப்படத்தை ரசிகர்கள் மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்