- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு தரப்புக்காக மட்டுமே படம் எடுத்தால் எப்படி தியேட்டர்களில் கூட்டம் வரும்? - ஆவேசமாக...

இப்படி ஒரு தரப்புக்காக மட்டுமே படம் எடுத்தால் எப்படி தியேட்டர்களில் கூட்டம் வரும்? – ஆவேசமாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்வி உதயகுமார். கோவையை சேர்ந்தவர். எஜமான் கிழக்குவாசல் சின்னக்கவுண்டர் பொன்னுமணி சிங்காரவேலன் உரிமை கீதம் போன்ற மாஸ் வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ரெட் லேபில் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, முதலில் இந்த படத்தின் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. நான் கோயம்புத்தூர்காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்காரரும் எனக்கு பட வாய்ப்பு கொடுத்தது இல்லை.

- Advertisement -

ஆனால் லெனின் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் லெனினை நான் பாராட்டுகிறேன். என்னிடம் அவர் வந்தவுடனே, முதலில் படம் தயாரிக்கிறாயா? என்றுதான் கேட்டேன். எதற்கும் யோசனை செய். எச்சரிக்கையாக இரு என்றுதான் சொன்னேன். ஏனென்றால் படம் தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.

ஒன்றை நான் இங்கே சொல்லியாக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த கதைகள் தமிழ் சினிமாவில் வருவதில்லை. பாசமலர் குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களை பார்த்துவிட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டும் விமர்சனம் செய்து கொண்டும் இருப்பார்கள்.

- Advertisement -

படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்கு சென்ற காலம் அது. இப்போது அப்படியெல்லாம் இல்லை. அனைவரும் பார்க்கும் படியாக படம் எடுக்கிறார்களா என்றால் இல்லை. ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? அப்புறம் தியேட்டருக்கு எப்படி கூட்டம் வரும்?

அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்கள் இன்று திரைக்கு வருவதே இல்லை. அப்படிப்பட்ட நல்ல படங்களை மக்கள் விரும்பும் படியான படங்களை உருவாக்க புதியவர்கள் முயற்சிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் பார்க்கும் விதமான படங்கள் தமிழில் வர வேண்டும் என்று இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்