- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படம் ஜனவரி 9 அல்லது 10ம் தேதி ரிலீஸ்? - முடிவில் திடீர் மாற்றம்...

பராசக்தி படம் ஜனவரி 9 அல்லது 10ம் தேதி ரிலீஸ்? – முடிவில் திடீர் மாற்றம் செய்த படக்குழு – வெளியான லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

- Advertisement -

அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் பராசக்தி. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை ஸ்ரீலீலா நடிகர்கள் ரவி மோகன் அதர்வா குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறிய பிறகு தமிழ் சினிமாவில் அவரது இடத்தை அடுத்து நிரப்ப போகிறவர் யார், அதாவது விஜய் இடத்துக்கு அடுத்து வரப்போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பலரும் அதற்கு தகுதியானவர் நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்று கூறிவருகின்றனர்.

- Advertisement -

அதற்கேற்ப நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில், கேமியோ ரோலில் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜய் சிவகார்த்திகேயனிடம் சொல்லும் காட்சி வந்தது. துப்பாக்கி விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதால், விஜயே இனி தன் இடத்துக்கு தகுதியானவர் எஸ்கே என்று கூறிவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது இவரது கடைசி படம். அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் பொங்கல் ரிலீஸ் என்ற அடிப்படையில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜனவரி 9 அல்லது 10ம் தேதி பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆனால் இப்போதைய நிலவரப்படி ஜனநாயகன் படம் மட்டுமே ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. அடுத்து 5 நாட்கள் கழித்து ஜனவரி 14ம் தேதி தான் பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் 3 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் ஆந்திரா தெலுங்கானாவில் பராசக்தி படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே போல் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளிலும் பராசக்தி படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே தமிழ்நாட்டில் வருகிற ஜனவரி 14ம் தேதி பராசக்தி ரிலீஸ் ஆனாலும், அதன்பிறகு 1 வாரம் கழித்து ஜனவரி 23 அல்லது 24ம் தேதிகளில் ஆந்திரா தெலுங்கானா மற்றும் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்