- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் குறையாத கூட்டம்... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியை வசூல் செய்ததா அந்த மலையாள திரைப்படம்......

இன்னும் குறையாத கூட்டம்… தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியை வசூல் செய்ததா அந்த மலையாள திரைப்படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு பிறந்தது முதல் இதுவரை சொல்லிக் கொள்ளும்படி அந்த அளவுக்கு பிரமாதமான திரைப்படங்கள் எதுவும் வரவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன்னு திரைப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. இருப்பினும் பிளாக்பஸ்டர் என்ற இடத்தை எந்த படமும் பெறவில்லை.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினி ரசிகர்களுக்கே பெரியளவு ஆர்வத்தை தூண்டாத இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றதால் தோல்வி அடைந்தது. சரி பெரிய பட்ஜெட் படங்கள் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், சிறிய பட்ஜெட் படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

மணிகண்டனின் முந்தைய திரைப்படமான குட் நைட், மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் அடுத்த படமான லவ்வர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவும் இளைஞர்களை கவர்வதற்காக எடுக்கப்பட்டு அந்த அளவு சொல்லிக் கொள்ளும் படியாக அமையாமல் போனது.

- Advertisement -

இப்படி ஒரு படமும் உருப்படாத நேரத்தில், மலையாளத்தில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது. மலையாளத் திரைப்படம் தான் என்றாலும் அதில் பெரும்பாலும் தமிழ் வசனங்கள் இடம் பெற்றிருந்ததால், படத்திற்கு இங்கு ஓரளவு ரீச் இருந்தது. அதேபோல், குணா திரைப்படத்தின் காட்சியையும் சரியாக பயன்படுத்தி இருந்ததால் தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸை ரசிகர்கள் வரவேற்றனர்.

நாளுக்கு நாள் படத்திற்கு கூட்டம் அதிகரிக்க, கேரளாவை விட தமிழ்நாட்டின் இந்த திரைப்படம் அதிகளவு பேசப்பட்டது. தற்போது வரை திரையரங்குகளில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு கூட்டம் குறையவில்லை என்றே தான் கூற வேண்டும். இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் மட்டும் அந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்கள் படமே இந்த வசூலை பெற கஷ்டப்படும் சூழலில், ஒரு மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமித்து இருப்பது பேசு பொருளாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்