கடந்த 1980 90களில் பல படங்களில் நடித்தவர் சந்திரசேகர். இப்போது அவரை வாகை சந்திரசேகர் என்று அழைக்கின்றனர். குறிப்பாக சிவப்பு மல்லி பாலைவனச்சோலை போன்ற படங்களில் சந்திரசேகர் நடிப்பு பலரையும் கவர்ந்தது. சம்சாரம் அது மின்சாரம் கரகாட்டக்காரன் அடுத்த வீடு ஊமை விழிகள் கூட்டுப்புழுக்கள் செந்தூரப்பூவே முதல் வசந்தம் என ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் நடித்தது மாநாடு படம்தான். அதில் அரசியல்வாதியாக அவர் நடித்திருந்தார். சந்திரசேகர் கடந்த பல ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறார். திமுக கட்சி பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்று பேசி வருகிறார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை சந்திரசேகர் வெளிப்படுத்தும் சிறந்த கலைஞராக இருந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் வாகை சந்திரசேகர் கூறியதாவது, இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் பல வெற்றிகளை சினிமாவில் குவித்தவர். அவர் பெற்ற எல்லா வெற்றிகளுக்குமே தகுதியானவராக தான் திறமைமிக்கவராக மணிவண்ணன் இருந்தார்.
வாழ்க்கையில் எல்லாவிதமான வெற்றியாளர்களுக்குமே சில பழக்கங்கள் இருக்கின்றன. அந்த வகையில் மணிவண்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்தது. மதுப்பழக்கம் என்பது சந்தோஷமாய் இருப்பதற்கு தான். வாழ்க்கையில் நடந்த பழசை மறப்பதற்கு தான் சிலர் குடிக்கின்றனர். சிலர் குடித்துவிட்டு போதையில் அந்த மகிழ்ச்சியை என்ஜாய் செய்கின்றனர்.
ஆனால் மணிவண்ணனை பொறுத்தவரை அவர் மதுபானம் பிடித்த நிலையில் காரல்மார்க்ஸ் போன்றவர்களின் தத்துவங்கள் மற்றும் பெரிய அறிவுபூர்வமான புத்தகங்களை எல்லாம் மிகவும் ஆழமாக வாசித்துக் கொண்டே இருப்பார். அது எப்படி போதையில் அவர் அது போன்ற புத்தகங்களை படிக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.
அவரின் உடல்நிலை பாதித்ததற்கு விரைவில் அவர் இறந்து போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு என்று வாகை சந்திரசேகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இயக்குனர் மணிவண்ணன் கடவுள் மறுப்பாளராக இருந்தவர் என்பதும் திமுக ஆதரவாளராக தன்னை வௌிப்படுத்திக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





