- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பர்களுடன் சென்ற நடிகர் கார்த்தியை சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ், இது உருட்டல்ல… உண்மையில் நடந்த...

நண்பர்களுடன் சென்ற நடிகர் கார்த்தியை சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ், இது உருட்டல்ல… உண்மையில் நடந்த சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமாரின் மகன்தான் நடிகர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பி. அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பல வெற்றிப்படங்கள் தந்துள்ளார். ஆனால் 25வது படமாக வந்த ஜப்பான் பிளாப் ஆனது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே என்ற படத்திலும், இப்போது மெய்யழகன் என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். நான் மகான் அல்ல, பையா, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் 1, கைதி, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், சர்தார் போன்ற படங்கள், கார்த்திக்கு நல்ல வெற்றியை கொடுத்த படங்களாக அமைந்தன.

- Advertisement -

கார்த்தி மிகவும் எதிர்பார்த்த படம் அவரது 25வது படம் ஜப்பான். இந்த படத்தை டைரக்டர் ராஜூமுருகன் இயக்கினார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜூ முருகன் என்பதால், ஜப்பான் படத்தை ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் ஜப்பான் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.

தனது வெற்றிப்படங்களான தீரன் அதிகாரம் 1, கைதி, சர்தார் ஆகிய படங்களின் 2ம் பாகங்களில் விரைவில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் உள்ளது. இப்போது நடித்து வரும் வா வாத்யாரே, மெய்யழகன் ஆகிய படங்களை தொடர்ந்து, இந்த 2ம் பாகம் படங்களில் அவர்கள் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் படத்தில் நடிக்க வருவதற்கு முன் அமெரிக்கா சென்று அங்கு சில ஆண்டுகள் தங்கி படித்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தில்தான், போலீசார் கார்த்தியை கைது செய்துள்ளனர். அந்த தகவலை தான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்த போது, நடிகர் கார்த்தி மற்றும் நண்பர்கள் 2 கார்களில் சென்றுள்ளனர். முன்னால் ஒரு காரிலும் பின்னால் ஒரு காரிலும் நண்பர்கள் பயணித்த போது, கார்த்திக்கு வழி தெரியாது என்பதால் முன்னால் சென்ற நண்பர்கள் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் படுவேகமாக சென்றதால், கார்த்தியும் அதே வேகத்தில் சென்றிருக்கிறார். இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓவர் ஸ்பீடில் சென்றதாக அந்நாட்டு போலீஸ் கார்த்தி உள்ளிட்ட காரில் பயணித்த அனைவரையும் கைது செய்தது. பின், 250 டாலர் அபராதம் செலுத்திய பின் போலீசார் அவர்களை விடுவித்ததாக கார்த்தி அதில் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்