ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்தார். பிறகு அவர் இயக்கிய பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்தன. தொடர்ந்து 35 ஆண்டுகளாக சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி இயக்கிய படங்கள் என்றாலே சக்சஸ் என்பது கியாரண்டி என்று சொல்கிற அளவுக்கு ரசிகர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்ப ஜாலியான காதல் நிறைந்த காமெடி படங்களை தந்து தொடர்ந்து ஜெயிக்கும் கலையை கற்றவர். ஆனால் சமீபத்தில் ரஜினி நடிப்பில் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் ஆனார். ஆனால் இயக்குனர் சுந்தர் சி, திடீரென நான் இந்த படத்தை இயக்க விரும்பவில்லை என்று கூறி விலகி விட்டார்.
இதற்கும் ஏற்கனவே கமல் நடித்த அன்பே சிவம் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் ஆகிய படங்களை இயக்கியவர்தான் சுந்தர் சி. இந்த 2 படங்களுமே இன்றும் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக தான் இருக்கின்றன. கதை திரைக்கதையில் ரஜினி கமல் இடையூறு இருக்கும் என்பதால் சுந்தர் சி வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி அவராக விலகினாரா, அல்லது சிலரால் வெளியேற்றப்பட்டாரா என்று கோலிவுட்டில் ஒரு சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது. பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசும் சுந்தர் சி விரைவில் இதுகுறித்த உண்மைகளை பேசுவாரா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ரஜினி கமலுடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அவர் வெளிப்படுத்த வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.
இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி நயன்தாரா நடித்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி படத்தின் நாயகனாகவும் சுந்தர் சி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக நடிகர் விஷால் நடிக்கும் ஒரு புதிய படத்தை அவர் டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் விஷால் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த மதகஜ ராஜா படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அப்போதே அடுத்த படம் சுந்தர் சி விஷால் கூட்டணி உருவான நிலையில் இப்போது அது மீண்டும் கைகூடி உள்ளது. விரைவில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





