- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 ஆண்டுகள் என் தந்தையால் எனக்கு அப்படி ஒரு கொடுமை நடந்தது… நடிகை குஷ்பு கூறிய...

8 ஆண்டுகள் என் தந்தையால் எனக்கு அப்படி ஒரு கொடுமை நடந்தது… நடிகை குஷ்பு கூறிய பகீர் தகவல் – மனம் கலங்கிப்போன ரசிகர்கள்!

- Advertisement -

இந்த பூமியில் வாழும் விலங்குகளுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதர்களுக்கு தான் எதையும் நல்லது கெட்டது என உணர்ந்து பார்க்கும் ஆறறிவு உள்ளது. அதில் ஒழுக்கமும் சிறந்த குணங்களும் நல்ல மனிதர்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் மனித உருவத்தில் இருந்தாலும் இன்னும் சில மனிதர்கள் மிருகங்களாக தான் குணத்தில் இருக்கின்றனர்.

அதுபோன்ற மிருகத்தனம் கொண்ட மனிதர்களின் கொடூர செயல்கள் இந்த காலகட்டத்திலும் தொடர்வதுதான் வேதனை. கொடுமையின் உச்சமாக இருக்கிறது. இப்போதும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் சில நேரங்களில் முதியவர்களால் குடிபோதை நபர்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர். வயதான மூதாட்டிகள் குடிபோதை வாலிபர்களால் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

- Advertisement -

இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவது மனிதர்களாக உள்ள சிலர் மிருகங்களாக மாறி விடுவதை தான் வெளிப்படுத்துகிறது. சில நேரங்களில் இப்படிப்பட்ட சிலர் ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களை கடிப்பது போல சொந்த உறவுகளுக்கு உள்ளேயே இதுபோன்ற அதிகபட்ச கொடுமைகளை அரங்கேற்றி விடுகின்றனர். இது வெளியில் சொல்வதற்கே வெட்கக்கேடான ஒரு செயலாக உள்ளது.

ஆனால் அதையும் ஒரு பிரபல நடிகை வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒரு விதத்தில் அவரது இந்த துணிச்சலும் தைரியமும் பாராட்டுகளுக்கு உரியது. சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர் இவ்வளவு வெளிப்படையாக பேசியிருப்பது பெண்களுக்கு சிறந்த விழிப்புணர்வாகவும் யாரிடமும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது, 8 வயதிலிருந்து என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இதை வெளியே சொன்னால் என்னுடைய அம்மாவையும் சகோதரர்களையும் அடிப்பேன் என்று என்னை மிரட்டினார். என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் தந்தையோடு பேசினாலும் என்னால் அவரை தந்தையாக ஏற்க முடியவில்லை.

ஏனெனில் அவரால் பாலியல் துன்புறுத்தலை 15 வயது வரை நான் அனுபவித்துள்ளேன். 15 வயதுக்கு பின்னரே எதிர்த்து பேசும் தைரியம் எனக்கு வந்தது. அதன் பின்பு அவர் எங்களை விட்டுவிட்டு அவர் தனியே சென்று விட்டார். அதற்கு பிறகு எங்கள் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. என் தாயார் அனைத்து விதத்திலும் எனக்கு ஆதரவாக இருந்தார் என்று நடிகை குஷ்பு அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்