இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் பராசக்தி. நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாகவும் நடிகர் ரவி மோகன் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் நடிகை ஸ்ரீலீலா படத்தின் நாயகியாக நடித்துள்ளார். கடந்த 1960 – 65 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
முதலில் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனவர் நடிகர் சூர்யா தான். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற கதைக்களத்தில் இந்த படத்தின் திரைக்கதை இருந்ததால் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்காமல் வெளியேறி விட்டார். பிறகு நடிகர் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில் மற்ற படங்களில் நடிக்க அவர் கமிட்மென்ட் இருந்ததால் கடைசியில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் பிரமோஷன் ‘வேர்ல்ட் ஆப் பராசக்தி’ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, தலைவர் ரஜினிகாந்த் சொன்னதைப் போல சோதனையை சந்திச்சாதான் சாதனை என்பது பராசக்தி படத்துக்கு ரொம்படும் பொருந்தும்.
ஏனென்றால் இந்த படம் எங்களுக்கு பல சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் படம் வந்த பிறகு அது சாதனையாக மாறும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு பராசக்தி படம் பல சவால்களை கொண்டது. அதை எல்லாம் கஷ்டப்பட்டு கடந்துதான் இந்த படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.இந்த கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா கிட்டத்தட்ட 4, 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார்.
அவர் இந்த கதையில் ஒரு டிகிரியே முடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால் அவர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்தால் போதும் என்ற ஒரு மனநிலையில் நம்பிக்கையில் நான் இருந்தேன். இந்த கதை 1965 களில் நடக்கும் வரலாற்று பின்னணியைக் கொண்டது என்பதால் இதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது.
பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துள்ள ரவி மோகன் கல்லூரி காலத்தில் இருந்தே எனக்கு அவர் ஒரு ஹீரோ. அவர் இந்தப் படத்தில் எனக்கு வில்லனாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். முதன் முறையாக ரவிமோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.





