- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரில் நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய அருள்நிதி, 10 நாட்களில் டிமாண்டி காலனி 2 வசூலித்தது எத்தனை...

திரில் நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய அருள்நிதி, 10 நாட்களில் டிமாண்டி காலனி 2 வசூலித்தது எத்தனை கோடி? – அடேங்கப்பா, வசூலும் மிரட்டலா இருக்குதே…

- Advertisement -

நடிகர் அருள்நிதி, திமுக குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். ஆனால் எந்த விஷயத்திலும் கட்சி பாரம்பரியம் காட்டாமல் ஒரு நடிகராகவே தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அறிமுகமான முதல் படம் வம்சம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அருள்நிதி நடித்த மௌன குரு, தகராறு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம், பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் 2015ம் ஆண்டில் வெளிவந்த டிமாண்டி காலனி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி படம், திரில் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் 4 இளைஞர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், பின்புலத்தில் டிமாண்டி காலனி நடந்த மர்ம சம்பவங்களும் என படம் வேற லெவலில் ரசிகர்களை மிரட்டியது.

இந்த படத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 2ம் பாகம், கடந்த 15ம் தேதி வெளியானது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பல காட்சிகளில் இயக்குனர் ரசிகர்களை மீரட்டி இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக சைனீஷ் ரெஸ்டாரெண்டுக்குள் சிக்கிக்கொண்ட அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் மற்றும் புத்த மட மந்திரவாதி ஆகியோரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3ம் பாகம், டிமாண்டி காலனி 4ம் பாகம் என படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

டிமாண்டி காலனி 2 படத்தின் இறுதி காட்சிகள், அடுத்தடுத்த படங்களுக்கான முன்னோட்டமாக இருப்பதால் நிச்சயம் அடுத்த பாகங்களும் இதைவிட மிரட்டலாக இருப்பதில் சந்தேகம் இல்லை. 2ம் பாகத்தில் லாஜிக்காக சில விஷயங்கள் உதைத்தாலும், திகில் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் இதுவரை 34.8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்