- Advertisement -
Homeபொழுதுபோக்குஅத்தனை ஆண்களுக்கு மத்தியில் நான் ஒருத்தி மட்டுமே பெண்… படப்பிடிப்பு தளத்தில் அப்படி செய்யச் சொன்னாங்க...

அத்தனை ஆண்களுக்கு மத்தியில் நான் ஒருத்தி மட்டுமே பெண்… படப்பிடிப்பு தளத்தில் அப்படி செய்யச் சொன்னாங்க – நடிகை ராதிகா ஆப்தே சொன்ன பகீர் சம்பவம்!

- Advertisement -

மும்பையை சேர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தி சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவில் நடிக்கும் போது நடிகைகளுக்கு அதிக பாதுகாப்பும் சுதந்திரம் இருக்கிறது. அதுமட்டுமின்றி கதாநாயகிக்கும் இயக்குனர்கள் முக்கியத்தும் தந்து கதைக்களத்தை உருவாக்குகின்றனர் என்று ஒருமுறை கூறியிருந்தார்.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்று பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இப்போது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ராதிகா ஆப்தே இந்தி படங்கள் மட்டுமின்றி பிறமொழிகளிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்திலும் அடுத்து நடிகர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்திலும் அடர் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் நிலை குறித்த அதிர்ச்சியான குற்றச்சாட்டை எழுப்பிஇருக்கிறார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, நான் பணத்திற்காக தான் தென்னிந்திய படங்களில் நடித்தேன். அங்கு ஷூட்டிங் செட்டில் இருப்பதே எனக்கு ரொம்பவும் கடினமாக இருக்கும்.

- Advertisement -

எனக்கு நன்றாக அந்த சம்பவம் நினைவிருக்கிறது. ஒரு படத்தின் சூட்டிங்கில் நான் மட்டுமே பெண். சுற்றி இருக்கும் மற்ற எல்லோரும் ஆண்களாக இருந்தார்கள். அவர்கள் என்னுடைய மார்பகம் மற்றும் பின்புறம் பாடிங் வைத்து பெரிதாக மாற்றச் சொன்னார்கள். திரையில் அவை பெரிதாக காட்ட வேண்டும் என்றார்கள்.

அவர்கள் நிறைய வைக்க சொன்னார்கள். இன்னும் எவ்வளவுதான் வைப்பது என்று நான் கோபமாக அவர்களிடம் கேட்டேன். எனக்கு தனியாக மேனேஜர் இல்லை ஏஜென்ட் இல்லை. எனக்கு என்று தனியாக டீம் வரக்கூடாது எனவும் அவர்கள் கண்டிஷன் போட்டார்கள் என்று ராதிகா ஆப்தே ஆவேசமாக கூறியிருக்கிறார். அவரது இந்த குற்றச்சாட்டு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்