நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தவம் இருக்கின்றனர். ரஜினி நடிக்கும் படங்களை தயாரித்தால் பல கோடி ரூபாய் லாபத்தை அள்ளலாமே என தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு தேடி வந்தும் அதை நிராகரித்திருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பார்த்திபன் கூறியதாவது, ஒருமுறை என்னிடம் ரஜினிகாந்த் பேசிய போது. கோஸ்ட் என்ற ஒரு படம் வந்திருக்கு. அதில் மந்திரவாதி கேரக்டரில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நீங்க அந்த படத்துல நடிங்க. நாம சேர்ந்து எடுக்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.
அதே போல் இயக்குனர் எஸ்பி முத்துராமன் சாரும் என்கிட்ட படம் பண்ணுவோம் என்று கேட்டிருக்கிறார் என்றும் என்னிடம் ரஜினி சார் அப்போது கூறினார். எனக்கு அப்போது ரஜினி சார் படம் பண்ண தோணவில்லை. நமக்குதான் இன்னும் வயசு இருக்கே என்று நினைத்தேன். அந்த படத்தை எஸ்பி முத்துராமன் சாரே டைரக்ட் பண்ணட்டும் என்று ரஜினியிடம் நானே சொல்லி விட்டேன்.
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ரஜினி என்னிடம், நீங்க எவ்வளவு உயரம் என்று கேட்டார். அதாவது உங்க மனசு என்ன அவ்வளவு பெருசா என்ற அர்த்தத்தில் அப்படி கேட்டார் என்று அந்த நேர்காணலில் நடிகர் பார்த்திபன் நடந்த சம்பவம் குறித்து கூறியிருக்கிறார். ரஜினியை வைத்து முத்து படம் மாதிரி இல்லாமல் வேற ஒரு புதிய ஸ்டைலில் படம் பண்ணலாம் என்ற ஆசை பார்த்திபனுக்கு இருந்துள்ளது.
ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது ஹவுஸ்புஃல் குடைக்குள் மழை போன்ற தனது படங்களில் இயக்குனர் பார்த்திபன் பிஸியாக இருந்திருக்கிறார். அதனால் ரஜினியை வைத்து படம் பண்ணுவதை பெரிய விஷயமாக அவர் அப்போது எடுத்துக் கொள்ளவில்லை. எஸ்பி முத்துராமனுக்காக பார்த்திபன் விட்டுக் கொடுத்த படம்தான் பாண்டியன்.
பாண்டியன் படத்தில் ரஜினிகாந்த் குஷ்பு ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 1990களில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் பாண்டியன் படத்தை பார்த்திபன் இயக்கி இருந்தால் அது வேற மாதிரியான ஒரு வெற்றிப் படமாக கூட இருந்திருக்கலாம். தொடர்ந்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்திருக்கலாம். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என பார்த்திபன் ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்.





