- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்காக அந்த பிரபல நடிகர் திருப்பதிக்கு நடந்து சென்று வேண்டிகிட்டு வந்தார்… - தனது...

எனக்காக அந்த பிரபல நடிகர் திருப்பதிக்கு நடந்து சென்று வேண்டிகிட்டு வந்தார்… – தனது நண்பர் குறித்து நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நெகிழ்ச்சி!

- Advertisement -

கடந்த 75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி தேங்காய் சீனிவாசன் போன்ற நட்சத்திர நடிகர்களை பற்றி பேசாமல் தவிர்க்க முடியாது. ஏனென்றால் காமெடி நடிப்பிலும் குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் வில்லனாகவும் அவர்கள் அசத்தியவர்கள். 2 பேருமே தங்களது கதாபாத்திரங்களாக நேர்த்தியாக செய்வதில் வல்லவர்கள்.

இளமையான வயதிலேயே பல படங்களில் முதியவர் கெட்டப்பில் நடித்த பெருமை தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி இருவருக்குமே உண்டு. பல படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். காசேதான் கடவுளடா படத்தில் டீக்கடை பக்கிரிசாமியான தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி வீட்டுக்குதான் போலி சாமியாராக வருவார்.

- Advertisement -

அதில் மனோரமாவின் கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி இருப்பார். இந்த படத்தில் இவர்களது காமெடி காட்சிகள் இப்போதைய இளம் வயதினரையும் ரசிக்க வைக்கிறது. அதே போல் தில்லு முல்லு படத்தில் ரஜினி நடிப்பை விட அதிகளவில் ரசிகர்களால் கவனமும் பாராட்டையும் பெற்றது ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக நடித்திருக்கும் தேங்காய் சீனிவாசனின் மிக அற்புதமான நடிப்பை தான்.

சினிமாவையும் தாண்டி தேங்காய் சீனிவாசனுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. அதே போல் நாகேஷூக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் தோழமை இருந்துள்ளது. அந்த கால காமெடி நடிகர்களுக்குள் நல்ல அன்பும் ஒற்றுமையும் இருந்திருக்கிறது. தாங்கள் நடிக்கும் படங்களில் தங்களது நண்பர்களுக்கும் வாய்ப்பு கேட்கும் அன்பும் இருந்திருக்கிறது.

- Advertisement -

இப்போது 90 வயதுகளை கடந்து விட்ட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, எனக்கு ஒரு முறை இதயத்தில் பிரச்னை வந்தது. இதை கேள்விப்பட்ட என் நண்பன் தேங்காய் சீனிவாசன் என் வீட்டுக்கு வந்தான். டேய் நீயெல்லாம் சாகக்கூடாது. எனக்கு அப்புறம் நீதாண்டா என்று சொல்லிட்டு போனான்.

அவன் திருப்பதிக்கு நடந்தே போய் எனக்காக வேண்டிகிட்டு திரும்பி வந்தான். நீ நல்லா இருப்பே. பெருமாள் உன்னை கைவிடமாட்டார் என்று சொன்னான். அதை கேட்டவுடனே எனக்கு கண்களில் கண்ணீர் வந்துருச்சு. ரொம்ப ரொம்ப நல்லவன் சார் அவன். நான் அதிகமா அழுதது அவனுக்காக தான் என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்