- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவன் தலைவிக்கு பின் மீண்டும் பாண்டிராஜூடன் கை கோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி…ஆனா முதலில் ஷூட்டிங்...

தலைவன் தலைவிக்கு பின் மீண்டும் பாண்டிராஜூடன் கை கோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி…ஆனா முதலில் ஷூட்டிங் இந்த இயக்குனரின் படம்தான் – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். குறிப்பாக மெரினா வம்சம் பசங்க நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் போன்ற அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் குடும்ப டிராமா கதைக்களத்தில் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் 2025ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த வெற்றிப் படங்களில் ஒன்றாகும். அதனால் மீண்டும் விஜய் சேதுபதி பாண்டிராஜ் கூட்டணி விரைவில் கைகோர்த்து ஒரு புதிய படம் உருவாகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இன்னும் 1 மாதத்தில் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று விடும். இதற்கிடையே தெலுங்கில் உருவாகி வரும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். நடிகர் விஜய தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதில் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். முதன்முறையாக விஜய் சேதுபதி சாய்பல்லவி ஜோடி இந்த படத்தில் இணைகிறது. சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சாய்பல்லவி நடிக்கிறார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இப்போது வேறு ஒரு படத்தை டைரக்ட் செய்து வருவதால் அந்த படத்தின் ஷூட்டிங் முடித்த பிறகே விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார். அதனால் அதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தான் முதலில் துவங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்