- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பையன் விஜய் அவர் டைரக்‌ஷனில் ஒரு படத்திலாவது நடிக்கணும் என்று நான் ஆசைப்பட்டேன் -...

என் பையன் விஜய் அவர் டைரக்‌ஷனில் ஒரு படத்திலாவது நடிக்கணும் என்று நான் ஆசைப்பட்டேன் – ஓபனாக பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் புரட்சி இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர். ரஜினி விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்கள் நடித்த பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 1992ல் தனது மகன் விஜயை நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் நட்சத்திர நடிகராக உள்ளார். அவர் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தில் தலைவராகவும் அவர் இப்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது, இயக்குனர் பாலுமகேந்திராவை எனக்கு பிடிக்கும். அவரை டைரக்டர் என்று சொல்ல மாட்டேன். அவர் ஒரு கவிஞர். அவரது படங்கள் கவிதை போல இருக்கும். அதில் கற்பனையே இருக்காது. நடைமுறை வாழ்க்கை தான் இருக்கும்.

மென்மையான வாழ்க்கையை கதைகளை படமாக தருவார். அவரது படங்களில் அந்த காலத்தில் இருந்த உண்மையான காதல் இருக்கும். தெளிந்த நீரோடை போல அவரது படங்கள் எளிதானதாக இருக்கும். பாலுமகேந்திராவை அதனால் நான் விரும்புவேன். அதே போல இயக்குனர் வெற்றிமாறனும் எனக்கு பிடிக்கும்.

- Advertisement -

ஆனால் பாலு மகேந்திராவிடம் இருந்து வந்த வெற்றிமாறன் அதற்கு நேர்மாறாவனர். இருவருக்கும் வித்யாசம் இருக்கும். அவர் மென்மையானவர். ஆனால் இவர் எடுத்தவுடனே அதிரடியாக இருக்கும். ஆனால் இவரும் நடைமுறை வாழ்க்கையை தான் படமாக தருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் என் மகன் விஜய் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். வெற்றிமாறனும் இப்படி ஆசைப்பட்டார் என்றுதான் நினைக்கிறேன் என்று அந்த விழாவில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசகேர் வெளிப்படையாக பேசினார். நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகி விட்டதால் இனி வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்