கடந்த 2016ம் ஆண்டில் வெளியான மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வாமிகா கபி. இந்த படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் டைரக்ட் செய்திருந்தார். ஆனால் இந்த படத்துக்கு பிறகு தமிழில் வாமிகா கபி தொடர்ந்து நடிக்கவில்லை.
ஆனால் மலையாளம் இந்தி பஞ்சாபி மொழி படங்களில் அவர் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான டிசி படத்தில் சந்திரா என்ற கேரக்டரில் வாமிகா கபி நடித்திருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. மேலும் இந்த படத்தை 2ம் பாகமாகவும் எடுக்க படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசி படம் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது.
எப்போதுமே முதல் படத்தில் சரியாக கண்டுக்கொள்ளப்படாத சில நடிகைகள் பின்னாளில் பெரிய நட்சத்திரமாக மாறி அசத்தியிருக்கின்றனர். அந்த வகையில் ரெண்டு படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா , பிறகு அருந்ததி படத்தில் நடித்து பெரிய அளவில் கவனம் பெற்றார்.
அதே போல் கோரிபாளையம் உள்ளிட்ட சில படங்களில் ஏற்கனவே நடித்த சுவாசிகா லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகுதான் பிரபலமானார். அதே போல் தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்த போது கவனம் பெறாத நடிகை வாமிகா கபி, இப்போது டிசி படம் மூலம் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் சூர்யா 49 ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். அதே போல் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்திலும் வாமிகா கபி நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.





