- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் ஆசைப்பட்டது நடக்கலே, ஆனா சத்தமே இல்லாம சூர்யா சாதிச்சு காட்டீட்டாரே? - அட இப்படி...

சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டது நடக்கலே, ஆனா சத்தமே இல்லாம சூர்யா சாதிச்சு காட்டீட்டாரே? – அட இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்ததா?

- Advertisement -

நடிகர் விஜய் சினிமாவை விட்டு முற்றிலும் விலகிய நிலையில் இப்போது தமிழக முதல்வராக உள்ளார். அவர் சினிமாவில் விட்டுச் சென்ற காலியிடத்தை பிடிக்க சில முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு உள்ளூர ஆசை இருக்கிறது. அதில் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் இடத்துக்கு வர ஆசைப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

அதனால் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் என்று தேதி அறிவித்த நிலையில் அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸ் செய்ய அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை வசூலில் பராசக்தி முந்தி விட்டால் விஜயை விட அதிக வசூல் நாயகன் என சாதனை சிவகார்த்திகேயன் படைத்திருப்பார்.

- Advertisement -

அதுதான் அவரது ஆசையாகவும் இருந்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் திரைக்கு வரவில்லை. பராசக்தி படம் மட்டுமே வெளியானது. ஆனால் ஒருவேளை ஜனநாயகன் படம் வந்திருந்தாலும் பராசக்தி வசூலில் தோல்வி தான் அடைந்திருக்கும்.

ஏனெனில் எதிர்பார்த்த அளவுக்கு பராசக்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. பெரிய அளவில் வசூலையும் குவிக்கவில்லை. ஆனால் இப்போது சத்தமே இல்லாமல் ஜனநாயகன் படத்தை விட நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வசூலில் முந்தி சாதனை படைத்துள்ளது. நடிகர் சூர்யாவை பொருத்த வரை விஜய் பட வசூலை முறியடித்த முந்த வேண்டும் என்று ஆசைப்படுபவர் இல்லை.

- Advertisement -

ஆனால் அவர் அப்படி ஆசைப்படாமலேயே அப்படி ஒரு தரமான சம்பவம் இப்போது நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் மொத்தமாக கிராஷ் கலெக்சன் 159 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. அதே போல் கருப்பு படம் தமிழ்நாட்டில் மட்டும் மொத்த கிராஷ் கலெக்சன் 186 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வசூல் அடிப்படையில் பார்த்தால் தமிழ் நாட்டில் ஜனநாயகன் படத்தை விட கருப்பு படம் 27 கோடி ரூபாய் அதிக வசூல் செய்து கருப்பு படம் வசூலில் ஜெயித்துள்ளது. இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் ஆசைப்பட்ட ஒரு விஷயம், நடிகர் சூர்யாவுக்கு ஆசைப்படாமலேயே நடந்துள்ளது. அதே நேரத்தில் இணையத்தில் லீக் ஆன பிறகும் ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் 159 கோடி ரூபாய் வசூலித்திருப்பதும் ஒரு பெரிய சாதனையாக தான் உள்ளது.

- Advertisement -

சற்று முன்