- Advertisement -
Homeபொழுதுபோக்குலதாவுக்கு கல்யாணமா? அதுவும் ரஜினி தான் மாப்பிள்ளையா? உனக்கென்ன பைத்தியமா? ஆவேசமாக பேசிய அனிருத்தின் அப்பா...

லதாவுக்கு கல்யாணமா? அதுவும் ரஜினி தான் மாப்பிள்ளையா? உனக்கென்ன பைத்தியமா? ஆவேசமாக பேசிய அனிருத்தின் அப்பா – அவரே சொன்ன சீக்ரட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் கே பாலசந்தர் கமல்ஹாசன் போன்றவர்களால் மட்டுமே அவர் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். பிறகு பல படங்களில் நடித்துதான் பெரிய நட்சத்திரமாக ரஜினிகாந்த் மாறினார். கே பாலசந்தர் இயக்கத்தில் தில்லுமுல்லு படத்தில் நடித்த போதுதான் லதாவை ரஜினிகாந்த் திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டார்.

வளரும் நட்சத்திரமாக அப்போது நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். அவரது மனைவி லதாவின் சொந்த சகோதரர் ரவி ராகவேந்தர். இவரும் அப்போது படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். குறிப்பாக வரவு நல்ல உறவு வேடிக்கை என் வாடிக்கை போன்ற விசு இயக்கிய படங்களில் ரவி ராகவேந்தர் நடித்திருக்கிறார். இப்போதும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் ரவி ராகவேந்தரின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரவி ராகவேந்தர் கூறியதாவது, நான் அப்போது கோயம்புத்தூரில் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் என் அம்மா எனக்கு போன் செய்து ஜில்லுவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று என்னிடம் சொன்னார்.

வீட்டில் லதாவை ஜில்லு என்றுதான் நாங்கள் கூப்பிடுவோம். திடீரென ஜில்லுவுக்கு திருமணம் என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரஜினிதான் மாப்பிள்ளை என்றும் சொன்னார். எனக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. நடிகர் ரஜினிதான் மாப்பிள்ளையா, உண்மையா சொல்றீங்களா, உங்களுக்கு என்ன பைத்தியமா என்று கேட்டுவிட்டேன்.

- Advertisement -

ஏனென்றால் லதாவுக்கு அப்போது ரொம்பவும் சின்ன வயது. திடீரென்று லதாவுக்கு திருமணம் என்று சொன்னதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் வீட்டுக்கு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்று இரவே சென்னைக்கு வீட்டுக்கு வந்து விட்டேன். நான் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு சென்றால் அங்கே ரஜினிகாந்த் அமர்ந்திருக்கிறார் நானும் அவரும் மொட்டை மாடிக்கு சென்று தனியாக 20 நிமிடங்கள் பேசினோம்.

அப்போது அனைத்தையும் என்னிடம் ரஜினிகாந்த் ஓபனாக சொன்னார். அவரிடம் அப்போது எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கூட என்னிடம் வெளிப்படையாக சொன்னார். அப்போது அவரது நேர்மையும் உண்மையும் எனக்கு பிடித்ததால் நானும் லதா ரஜினி திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டேன் என்று ரவி ராகவேந்தர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்