இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமானார். பருத்தி விரன் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இதுவரை 26 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாமே கார்த்திக்கு வியாபாரம் ரீதியாக வெற்றிப் படங்கள் தான்.
அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் மார்ஷல் ஆகிய படங்களை தொடர்ந்து அவர் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளார். தனுஷ் படத்தை அடுத்ததாக இயக்கும் எச் வினோத் அந்த படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
எப்போதுமே சண்டை படங்கள் சீரியஸ் ஆன குடும்ப படங்கள் என்று இல்லாமல் காமெடி படங்களில் ஹீரோக்கள் நடித்தால் அது பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகும். அதனால்தான் ரஜினி கமல் போன்றவர்கள் இடையிடையே முழுமையான காமெடி படங்களில் நடிக்கவும் கால்ஷீட் ஒதுக்கினார்கள். மகாராசன் சதிலீலாவதி போன்ற படங்களில் கமல் நடித்தது அதனால்தான்.
நடிகர் கார்த்திக்கும் பல ஆண்டுகளாகவே முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. ஏற்கனவே ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடிகர் சந்தானத்துடன் கார்த்தி காமெடி படத்தில் கார்த்தி நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனால் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்க இப்போது கமிட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர் சி படம் என்றாலே அது காமெடிதான் முக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி சுந்தர் சி படம் நிச்சயமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த வணிக ரீதியான வெற்றிப் படமாகவும் அமையும் என்பதை கியாரண்டியாக சொல்லலாம்.
அதனால் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க கார்த்தி ஆர்வம் காட்டிய நிலையில் அதற்கு சுந்தர் சியும் ஓகே சொல்லி விட்டார். இப்போது கதை டிஸ்கசன் நடந்து வருகிறது. இப்போது கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு சுந்தர் சி படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. கார்த்தி சுந்தர் சி இணையும் முதல் படம் இது என்பதும் கவனிக்கத்தக்கது.





