- Advertisement -
Homeபொழுதுபோக்குநிறைய இடங்களில் கத்திரி போட்ட சென்சார் போர்டு - ஜனநாயகன் படத்துக்கு வந்த சிக்கல்...

நிறைய இடங்களில் கத்திரி போட்ட சென்சார் போர்டு – ஜனநாயகன் படத்துக்கு வந்த சிக்கல் – தவிப்பில் தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்க்கு ஜனநாயகன் படம் கடைசி படமாக அமைந்து விட்டது. இதுதான் நான் நடித்த கடைசி படம் என்று அவரே திட்டவட்டமாக மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் அறிவித்து விட்டார். அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகவும் அதிகரித்து வருகிறது.

வழக்கமாக விஜய் படங்கள் என்றாலே பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளிவிடும். விமர்சன ரீதியாக மொக்கை படமாக சொல்லப்பட்டாலும் விஜய் நடித்த படங்கள் என்றாலே வணிக ரீதியாக வெற்றியை தொட்டு விடும். வாரிசு பீஸ்ட் லியோ தி கோட் என பல படங்கள் அப்படிதான் பெரிய வசூலை குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதையொட்டில சமீபத்தில் ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டுக்கு படக்குழு அனுப்பி வைத்தது. அப்போது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததால் கிட்டத்தட்ட 64 இடங்களில் கத்திரி போட்டு அவற்றை நீக்கிவிட்டதாக தெரிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் தெலுங்கில் நடிகர் பாலய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் படம் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் வன்முறை காட்சிகள் என்பதும் மிகவும் சாதாரணம். படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைய இருக்கும். அதனால் அந்த திரைக்கதையில் உருவான இந்த படத்திலும் அதுபோன்ற காட்சிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

அத்துடன் ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. படத்தில் வரும் இத்தனை முக்கியமான காட்சிகளை நீக்கினால், தியேட்டரில் படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு படம் சுத்தமாக புரியாது. காட்சிகள் கோர்வையாக வராமல் திரைக்கதையில் குழப்பம் ஏற்படும். படத்தின் வெற்றியை அது கடுமையாக பாதிக்கும். கடும் விமர்சனங்களுக்கும் இது வழிவகுக்கும் என்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இதை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும். வசூலையும் பெரிய அளவில் அள்ளிவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்த தயாரிப்பு நிறுவனமும் பலத்த அதிர்ச்சியில் உள்ளது. அதனால் தணிக்கை குழுவுடன் இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தில் உள்ள 64 காட்சிகளின் வெட்டுக்களை குறைத்துக் கொண்டாலும் படத்துக்கு ஏ சான்றிதழ் தான் தரப்படும் என சென்சார் போர்டு திட்டவட்டமாக கூறுவதால் படக்குழுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்