திரைப்பட நடிகைகளை போலவே டிவி சீரியல்களில் நடிக்கும் சில நடிகைகளும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். சினிமாவில் நடிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே அவர்களால் நடிக்க முடிகிறது. அதன்பிறகு வாய்ப்பு கிடைத்து அவர்கள் அடுத்த படத்தில் நடிக்கும் போது தான் அவரைப் பற்றிய கவனம் ரசிகர்களுக்கு வருகிறது.
ஆனால் டிவி சீரியலில் ஒருவர் நடிக்கும் போது தினமும் அவர்களை டிவியில் பார்த்து பார்த்து அவர்களுக்கு மிகப்பெரிய அடையாளம் மக்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில் டிவி சீரியல் பிரபலங்களுக்கு சில நேரங்களில் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி தமிழில் சின்ன திரையில் கலைஞர் தொலைக்காட்சிகள் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் கௌரி என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் ஒரு முக்கிய சீரியலாக உள்ளது. இதில் துர்கா கனகா என்ற இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை நந்தினி.
இவர் ஆந்திராவை பூர்வமாக கொண்டவர். கன்னட சீரியல் நடித்து தனது நடிப்புலக பயணத்தை தொடங்கியவர். தமிழில் சின்னத்திரையில் கலைஞர் டிவியில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற தொடர் கௌரி சீரியலில் நந்தினி நடித்து வந்தார். அதில் துர்கா மற்றும் கனகா என்ற இரட்டை வேடங்களில் நந்தினி நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
தமிழில் நடிக்க தொடங்கிய முதல் சீரியலிலேயே இரட்டை வேடங்களில் நந்தினி நடித்தது பெரிய அளவில் கவனமும் வரவேற்பையும் பெற்றது. இந்த சீரியல் அவருக்கு நல்ல அடையாளத்தையும் கொடுத்தது. இந்நிலையில் நடிகை நந்தினி குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அதாவது இப்போது கௌரி சீரியலில் பிரேக் என்பதால் பெங்களூருக்கு நந்தினி சென்றிருக்கிறார். இன்று நந்தினி அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நடிகைகள் டிவி சீரியல் நடிகைகள் இப்படி தற்கொலை செய்யும் சம்பவங்கள் ரசிகர்களை பெரிய துயரத்தில் தள்ளிவிடுகின்றன.





