- Advertisement -
Homeபொழுதுபோக்குலவ் டுடேவுக்குப் பிறகு விஜயிடம் அப்படி ஒரு கதையை கூறினாரா பிரதீப் ரங்கநாதன்... அடக்கடவுளே இப்படி...

லவ் டுடேவுக்குப் பிறகு விஜயிடம் அப்படி ஒரு கதையை கூறினாரா பிரதீப் ரங்கநாதன்… அடக்கடவுளே இப்படி ஒரு ஸ்டோரியில் நடிக்காம போயிட்டாரே தளபதி…

- Advertisement -

வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் மிக முக்கிய நபராக மாறி இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இதற்கு மிக முக்கிய காரணம், இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இளைஞர்களைக் கவரும் வகையில் அவர் படம் எடுத்து வருவது தான். இதனை தனது முதல் திரைப்படம் ஆன கோமாளியிலேயே நிரூபித்தார் பிரதீப் ரங்கநாதன்.

90ஸ் கிட்ஸ் இன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நகைச்சுவை காதல் என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து அவர் இந்த திரைப்படத்தை கொடுத்தார். இதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இன்றைய சூழலில் அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்க, அதனால் இளைய தலைமுறையினரின் காதல் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை சுவாரசியமாக எடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது இயக்கத்தை சற்று ஓரம் கட்டி விட்டு முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அவர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதன் பிறகு எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

- Advertisement -

ஓ மை கடவுளே திரைப்படத்தை எடுத்த அஸ்வந்த் மாரிமுத்து தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரீச் ஆனது. இந்த நிலையில், அடுத்ததாக இன்னொரு திரைப்படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார். இதன் பிறகு அவர் இயக்கத்தின் மீது கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லவ் டுடே திரைப்படத்திற்கு பிறகு அவர் தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால் இது அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. தற்போது இந்த திரைப்படத்தின் கதையை தான், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அறிவியல் சார்ந்த கதைக்களமாக இது எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கதையை விஜய்க்கு அவர் கூறியிருக்கிறார் என்றால் நிச்சயம் படத்தை எதிர்பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்