- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரும்பி போற ஐடியா எல்லாம் இல்லே… ஐ யம் கமிங்… அனல் தெறிக்கும் வசனங்களோடு வெளியான...

திரும்பி போற ஐடியா எல்லாம் இல்லே… ஐ யம் கமிங்… அனல் தெறிக்கும் வசனங்களோடு வெளியான ஜனநாயகன் டிரெய்லர் – விசிலடிக்கும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாலை ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அனல் பறக்கும் வசனங்களோடு வெளியாகி உள்ள டிரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த டிரெய்லர் கடந்த 31ம் தேதி இரவே வெளியாகி ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனிருத் இசை தர முடியாமல் போனதால் 3 நாட்கள் தாமதமாக இன்று மாலை ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஜனநாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் மமிதா பைஜூவின் அப்பாவாகவும் விஜய் வருகிறார். நரேன் நாசர் பிரியாமணி பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் வருகின்றனர். வில்லனாக பாபி தியோல் மிரட்டி இருக்கிறார். சண்டை காட்சிகளில் விஜய் அதகளம் செய்திருக்கிறார்.

இதுவும் வழக்கமான ஒரு ஆக்சன் கதைக்களத்தில்தான் உருவாகி இருக்கிறது. தனது மகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை பார்த்து ஒரு தந்தையாக வெகுண்டு எழும் விஜய் வில்லனை பழிவாங்கும் ஒரு கதையாகவே இது தெரிகிறது. மகளுக்கு தைரியம் துணிச்சலை சொல்லித் தரும் பாசமிகு தந்தையாகவும் விஜய் தெரிகிறார்.

- Advertisement -

படத்தில் வரும் சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக தெரிகின்றன. விஜய் ஒவ்வொரு சீனிலும் மாஸ் காட்டியிருக்கிறார். சில அரசியல் வசனங்களும் தெறிக்க விடுகின்றன. திரும்பி போற ஐடியா எல்லாம் இல்லே, ஐ யம் கமிங் என்று சொல்வது அரசியலுக்கு மட்டுமா, அல்லது சினிமாவுக்குமா என்பதில் மட்டும் சந்தேகமாக உள்ளது.

ஏனெனில் விஜய் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆசையாக கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனநாயகன் படத்தை பொருத்த வரை ஒரு கமர்ஷியல் திருவிழாவாக இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு அமையப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில் 1960 -65 காலகட்டத்தில் உருவான கதையில் வர உள்ள பராசக்தி படம் ஜனநாயகனுக்கு முன்பு களத்தில் நின்று வசூலிக்குமா என்பதுதான் ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்