- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயகாந்தின் நிரந்தர உறக்கம் இனி அங்குதான், அவரது உடல் நல்லடக்கம் குறித்து வெளியான முக்கிய...

நடிகர் விஜயகாந்தின் நிரந்தர உறக்கம் இனி அங்குதான், அவரது உடல் நல்லடக்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்கள் – சுதீஷ் அறிவிப்பு

- Advertisement -

புரட்சிக்கலைஞர், கேப்டன், தேமுதிக தலைவர், நடிகர் என பலமுகங்களை கொண்டிருந்தாலும் மக்கள் மனங்களில் அன்புக்குரிய மனிதராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இன்று தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அது வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

காலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் சிலரும், அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்போது அங்கு ரசிகர்கள் கூட்டம் பலமடங்காக அதிகரித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த, அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையே தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். அவரும், நடிகர் கமல்ஹாசனும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

- Advertisement -

இதற்கிடையே சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் விஜய்காந்த் உடல் கொண்டு சென்றனர். அப்போது, விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை கடந்த போது துப்பாக்கி உயர்த்தி, சல்யூட் செய்து போலீசார் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், விஜயகாந்த் உடல் நல்லடக்கம் குறித்த தகவலை, விஜயகாந்தின் மைத்துனர், பிரேமலதாவின் சகோதரர் எல்கே சுதீஷ் முறைப்படி தெரிவித்துள்ளார். அதாவது நாளை ( வெள்ளி) மாலை 4.45 மணிக்கு கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்