- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காட்சியில் கமல் செய்தது ரஜினி ஸ்டைல்தான், ஆனால் அது யாருக்குமே தெரியாது - இந்தியன்...

அந்த காட்சியில் கமல் செய்தது ரஜினி ஸ்டைல்தான், ஆனால் அது யாருக்குமே தெரியாது – இந்தியன் படம் குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தில் அப்பா மகன் என 2 வேடங்களில் கமல் நடித்திருந்தார். இதில் சேனாபதி கேரக்டரில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இந்தியன் படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, இந்தியன் படம் எடுக்கும் போது முதலில் அந்த படத்தின் கதையை ரஜினி சாருக்கு சொல்லி இருந்தேன். ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை கமல் சாரை வைத்து பண்ணும்போது சில விஷூவல் காட்சிகள் எல்லாம் அப்படியே மைண்டில் நின்றிருந்தது.

- Advertisement -

அது என்னவென்றால் படத்தின் இண்டர்வெல் காட்சியில் அந்த சிபிஐ ஆபிஸர் கேரக்டர் வந்து கமலை அரஸ்ட் பண்ண வருவார். அப்போது ஈஸி சேரில் இருந்த கட்டையை பட் என்று கமல் வேகமாக தட்டி விடுவார். சடாரென எந்திரிச்சு அவரை தாக்கிட்டு முடியை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும். அந்த ஷாட்டை நான் எழுதிட்டேன்.

ஆனா ரஜினி சாரை மனசுல வெச்சுக்கிட்டு இதை சொன்னால் கமல் சார் இதை எப்படி எடுத்துக்கப் போறார் என்று மனசுக்குள்ள ஒரு நெருடலாக இருந்துச்சு. தயங்கிட்டே போய் அவர்கிட்ட சீனை சொன்னேன். அவரை தாக்கீட்டு தோள்ல டவலை தூக்கிப் போட்டுட்டு இப்படி முடியை அட்ஜஸ்ட் பண்ணுங்க என்று சொன்னேன். ஆனா அவர் எந்த பதிலும் சொல்லலை. எந்த ரியாக்சனும் பண்ணலே.

- Advertisement -

நான் அவர்கிட்ட சொல்லிட்டு போய் கேமராவை ஆன் பண்ணிட்டு ஸ்டார்ட் சொல்லிட்டேன். நான் சொன்ன மாதிரி கமல் அப்படியே அந்த சீனில் நடித்தார். ஆனால் கம்ப்ளீட் டிபரண்ட். அதில் துளி கூட ரஜினி சார் சாயலை நீங்க அதில் பார்க்க முடியாது. அதில் அவருடைய அந்த கதாபாத்திரத்தின் சாயல் மட்டும்தான் இருக்கும்.

அந்த டவலை தோளில் தூக்கிப் போடறது, முடியை அட்ஜஸ்ட் பண்றது எல்லாமே மொத்தமாக வித்யாசமாக இருக்கும் என்று இயக்குனர் ஷங்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ரஜினி ஸ்டைலில் இயக்குனர் ஷங்கர் சொன்ன காட்சி என தெரிந்து இருந்தும் அதை தனது பாணியில் நாசூக்காக மாற்றி நடித்து அந்த கேரக்டரையே மெருகேற்றிய கலைஞன் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

சற்று முன்