- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது… இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள் - வெளிப்படையாக...

முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது… இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள் – வெளிப்படையாக பேசிய நடிகர் ரவிமோகன்!

- Advertisement -

வருகிற 10ம் தேதி பராசக்தி படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரவி மோகன் பேசியதாவது, பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் பராசக்தி. இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக பராசக்தி படம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும். அதற்கு அவர் ரசிகர்களாகிய நீங்கள் எப்போதும் கூடவே இருக்க வேண்டும். பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள்.

- Advertisement -

ஆனால் முதல்முறையாக ஒரு பெண் சுதா கொங்கரா இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆஸ்கர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த பராசக்தி தீயை நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை. கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல் விளக்கு.

பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். எனக்கு இரண்டே காரணம்தான் இருந்தது. ஒன்று சுதாவின் கதை. மற்றொன்று சுதா. ஆனால் இப்போது இந்த முடிவு குறித்து நினைத்துப் பார்க்கையில் எந்த கவலையும் இல்லை. மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள். இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள்.

- Advertisement -

இந்த படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து இருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களை பற்றி தான் எனக்கு கவலை.

சுயமரியாதை மட்டும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும் என்று நடிகர் ரவிமோகன் அந்த விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். நடிகர் ரவிமோகன் பராசக்தி படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்