நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்க்கிழவி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்திருக்கிறார். தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார் சூரி நடிகை ஸ்ரீபிரியாமற்றும் இயக்குனர்கள் அருண்ராஜ் காமராஜ் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ராதிகா நடித்த தாய்க்கிழவி படமும் சரத்குமார் நடித்த ஆழி படமும் வெற்றி பெற வேண்டும். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இங்கே வந்திருக்கிறார். அவர் ரஜினி பட இயக்குனர். ஆனாலும் அவர் மீண்டும் என்னுடன் படம் பண்ணுவதாக இருந்தது. ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.
நான் நல்லா இருக்கிறேன். என் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தபோது என் நண்பன் அருண் ராஜாவுக்காக இந்த கம்பெனி ஆரம்பித்து கனா படத்தை தயாரித்தேன். நாங்கள் கனவுடன் திருச்சியில் இருந்து வந்தோம். இப்போது ஜெயித்திருக்கிறோம். பெண்கள் பவர் ஃபுல் என்பதை காண்பிக்க கனா படம் எடுத்தோம். உலகில் பெண்கள் கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட படம் கொட்டுக்காளி வரை அது சென்றது.
அமரன் படத்துக்கு 8 விருதுகளும் கொட்டுகாளி படத்துக்கு 2 விருதுகளும் கிடைத்தது. உலகின் பல இடங்களில் திரையிடப்பட்டது. தாய்க்கிழவி படம் என் பாட்டி இருந்த பிரான்மலைக்கு சென்ற பீலிங்கை தருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கீங்க என்று சிவக்குமார் முருகேசனிடம் கமல் சார் சொன்னார். இந்த படத்தை ராதிகா மேடத்தை தவிர வேறு யாரும் பண்ண முடியாது. படப்பிடிப்பில் ராதிகாவுக்கு மூட்டு வலி இருந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம்.
ஆனால் மற்ற நடிகர்கள் கால்ஷீட் இல்லை. அதை புரிந்துகொண்டு அவர் நடித்துக் கொடுத்தார். இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆசைப்படுகிறேன். இந்தப் பெயர் பணம் புகழ் எனக்கு மட்டும் கடவுள் கொடுக்கவில்லை. அதை மற்றவர்களுக்கும் பயன்படுத்தணும் என்று நினைக்கிறேன். அதை நான் பண்ணீட்டும் இருக்கிறேன். அதற்காகவே இந்த படங்களை பண்ணுகிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி போகவோ அட்டாக் பண்ணவோ காலி பண்ணவோ வரவில்லை.
இந்த வாழ்க்கை வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். அதற்கு என்னை விட்டுடுங்க. அதை தான் நான் கேட்கிறேன். இந்த படங்களால் நான் கத்துக்கிடறேன். நான் ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை. கதை கேட்டு தான் பண்ணுகிறேன். என் மைனஸ்களை பிளஸ் ஆக்க நினைக்கிறேன். இண்டஸ்ட்ரியில் சிலர் ஏதாவது தடைகள் போட்டுக்கிட்டே இருக்காங்க. அதை தாண்டி வர நான் ரெடி. அதை நீக்கிவிட்டால் பல இயக்குனர்களை உருவாக்குவேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.





