சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இப்போது ஜனநாயகன் படம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை 9ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை. அதனால் படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை. வெளியீட்டு தேதியை பிறகு அறிவிக்கிறோம் என்று தெரிவித்து விட்டது.
இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் இல்லை என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. கடைசியில் சென்சார் என்ற பெயரில் படத்தை வரவிடாமல் தடுத்து விட்டார்களே என பலரும் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே திரை பிரபலங்கள் பலரும் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை என்பதால் ஆவேசமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மனம் உடைந்து விட்டேன் விஜய் அண்ணா. உங்கள் பக்கம் இருக்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவனாக நிற்கிறேன். உங்களுக்கு தேதி எல்லாம் தேவையில்லை. நீங்கதான் ஓப்பனிங்கே. ரிலீஸ் எந்த தேதியாக இருந்தாலும் எங்களுக்கு பொங்கல் அப்போதுதான் தொடங்கும் என்று ரவி மோகன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
நடிகர் சிபிராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் கான்பிடென்டா இருங்க, வெற்றி நிச்சயம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பதிவில், எது நடந்தாலும் சரி. இந்திய திரை உலக வரலாற்றிலேயே இது ஒரு மாபெரும் ஃபேர்வெல் ஆக அமையும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
நடிகர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும் நடிகர் விஜயின் ரசிகருமான இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், பாசாங்கான நீதிதான் அநீதியின் மிக மோசமான வடிவம் என்று கூறியிருக்கிறார். நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார். அதில் அநியாயத்தின் உச்சகட்டம் இது எல்லாம். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள் தான் நமக்கு பொங்கல். சும்மாவே ஜனநாயகன் வேற லெவல் பிளாக்பஸ்டர் தான். நீ வா தல நாங்க இருக்கோம். என்று சனம் ஷெட்டி அதில் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்சார் கோடு சான்றிதழ் தர மறுக்கிறது. தமிழ் திரை உலகின் மீது நடத்தப்படும் தாக்குதல். திரைப்படத்தை முடக்க நினைப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் சென்சார் போர்டை எதிர்க்க வேண்டும். தொழில்நுட்ப யுகத்தில் வாரியம் என்பது காலாவதியான அமைப்பு. ஜனநாயகன் சென்சார் விவகாரம் கடும் கண்டனத்திற்குரியது என்று எம்பி ஜோதிமணி கூறியிருக்கிறார்.





