- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் 50வது படம் அதுதானா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் - அந்த கூட்டணி மீண்டும் இணையுமா?

சூர்யாவின் 50வது படம் அதுதானா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் – அந்த கூட்டணி மீண்டும் இணையுமா?

- Advertisement -

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்போது கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அவரது 45வது படம். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து தெலுங்கு நடிகர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

சூர்யா 47 படத்தில் நடிகர் சூர்யா சிங்கம் படத்தை போலவே கம்பீரமான ஒரு போலீஸ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக முக்கிய நட்சத்திர நடிகர் நடிப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யா நடிக்கப் போகும் 50வது படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த படம் வாடிவாசல். இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். கலைப்புலி தாணு தயாரிப்பில் இந்த படம் உருவாக திட்டமிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் துவங்கப்பட்டது. இதற்காக தயாரிப்பாளர் தாணு ரூ. 22 கோடி வரை செலவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் விடுதலை விடுதலை 2 படங்களை முடித்து விட்டு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தை இயக்க முன்வந்தார். ஆனால் அப்போது சூர்யா போட்ட சில கண்டிஷன்களால் கடுப்பான இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க முடியாது என்று தவிர்த்த நிலையில் சூர்யாவும் வாடிவாசல் படத்தை விட்டு வெளியேறி விட்டார்.

- Advertisement -

இதன்பிறகு தான் வாடிவாசல் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தை தயாரிப்பாளர் தாணுவுக்காக இயக்க முன்வந்தார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே போல் சூர்யாவும் தாணுவிடம் பெரும்தொகை அட்வான்ஸ் ஆக வாங்கியிருக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு நடிகர் சூர்யாவுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்து அவரிடம் பேசி வருகிறார்.

அதாவது நீங்கள் வெற்றிமாறனுடன் இணைந்து எனக்கு வாடிவாசல் படத்தை செய்து கொடுங்கள். அல்லது என் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார். ஒருவேளை வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா சம்மதித்தால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அது சூர்யா நடிக்கும் 50வது படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்