அட்லீ ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர். தமிழில் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்த அட்லீ, இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை கொடுத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அட்லீ எப்போதும் ரசிகர்களை ஏமாற்றாதவர் என்றே கூறலாம். அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல டிரீட்டாகவே இருக்கும். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் ஆகிய அனைத்து கமர்சியல் வஸ்துக்களையும் மிகவும் கச்சிதமாகவும் அதே நேரத்தில் ரசிக்க வைக்கும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் இருக்கும்.
இவ்வாறு அட்லீ தொட்டதெல்லாம் வெற்றியாகவே இருந்திருக்கிறது. அதே போல் “ஜவான்” திரைப்படமும் மாபெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதனை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஒரு பக்காவான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக “ஜவான்” இருக்கும் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில் “ஜவான்” திரைப்படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளத்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “ஜவான்” திரைப்படத்திற்காக அட்லீ 30 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளாராம். “ஜவான்” திரைப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்று சினிமாத் துறையை சேர்ந்த பலருக்கும் நம்பிக்கை வந்திருக்க வேண்டும் என்று தோன்றும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த திரைப்படத்திற்காக அட்லீக்கு 50 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்களாம். அது மட்டுமல்லாது 10 கோடி ரூபாய் அட்வான்ஸும் வாங்கிவிட்டாராம் அட்லீ. ஆனால் அந்த படத்தில் யார் ஹீரோ என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.





