- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் மணிரத்னத்துக்கு இப்படி ஒரு வருத்தமா? இந்த விஷயத்தில் அவரை யாருமே...

இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் மணிரத்னத்துக்கு இப்படி ஒரு வருத்தமா? இந்த விஷயத்தில் அவரை யாருமே கண்டுக்கலையா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். இவர் இந்திய அளவில் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் ஒரு முக்கிய படைப்பாளியாக இருக்கிறார். ரோஜா, பம்பாய், ராவணன், மௌன ராகம், அக்னி நட்சத்திரம், தளபதி, நாயகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம்.

கடைசியாக அவரை இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2. இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றது. 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

- Advertisement -

இயக்குனர் மணிரத்னத்தை பொருத்தவரை அவரது படங்கள் எல்லாமே வேற லெவலில் ரசிக்கக் கூடிய படங்களாகத்தான் இருக்கும். எப்போதுமே அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனியான வரவேற்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் மணிரத்னத்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தக்லைப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதனால் தக்லைப் படத்தின் டிரெய்லர் வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் இயக்குனர் மணிரத்னம் மிகப்பெரிய வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் சமீபத்தில் வழங்கப்பட்ட 70வது மத்திய அரசின் தேசிய விருது வழங்கும் விழாவில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்துக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டன. இது தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் 4 விருதுகளை பெற்றும், தமிழ் சினிமா துறை சார்பில் அவருக்கு யாரும் வாழ்த்தோ பாராட்டுகளோ தெரிவிக்கவில்லை. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துகளை சொல்லவில்லை. அதேபோல் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் போன்றவர்களும் மணிரத்னத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக ரஜினிகாந்த், பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு கூட தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் நிலையில், மணிரத்னம் இயக்கிய படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தும் யாருமே அதை கண்டுகொள்ளாதது பெரிய வருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவரது சில நண்பர்களிடம் இதைப்பற்றி மணிரத்னம் மிகவும் வருத்தப்பட்டு பேசியதாக தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்