- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்தார் 2 படத்தில் இந்த விஷயத்தை கேட்கவும் நான் ஷாக் ஆயிட்டேன்... சூப்பராக சொன்ன கார்த்தி......

சர்தார் 2 படத்தில் இந்த விஷயத்தை கேட்கவும் நான் ஷாக் ஆயிட்டேன்… சூப்பராக சொன்ன கார்த்தி… டீசரையும் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு…

- Advertisement -

கார்த்தி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்தார். பி எஸ் மித்ரன் இதனை இயக்கியிருந்தார். கார்த்தி இரு வேடங்களில் கலக்கியிருந்த இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அந்த சமயம் சர்தார் உடன் போட்டி போடுவதற்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. அனைத்து தரப்பினரும் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பை கொடுத்த தவறியதால், பிரின்ஸ் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது. இப்படியான சூழலில் சர்தார் படம் தனி ஒருவனாக திரையரங்குகளில் சக்கை போடு போட ஆரம்பித்தது.

படமும் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் இருந்ததால், அதற்கு ரசிகர்கள் பச்சை கொடி காட்ட வசூலிலும் சர்தார் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்த ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. இது அவரின் 25வது திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் இங்கு சோகம்.

பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் அவர் நடித்த மெய்யழகன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. உறவுகளின் உன்னதத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மிக அழகாக கூறியிருந்தார் இயக்குனர் பிரேம்குமார். அந்த சமயத்தில் லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்ததால், வசூலில் எதிர்பார்த்த லாபத்தை மெய்யழகனால் பெற முடியவில்லை.

இந்த நிலையில், கார்த்தி தற்போது சர்தார் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கார்த்தி நடித்த படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் டீசரும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, இந்த மூவி ஒரு பெரிய போராக இருக்கும். இதில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மித்ரன் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து கூறும் போது நான் ஷாக் ஆகி விட்டேன். மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய எஸ் ஜே சூர்யா, எனக்கு சர்தார் படத்தின் முதல் பாகம் மிகவும் பிடிக்கும். எனது கேரக்டர் மிகவும் சவாலாக இருந்தது. இது ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திரைப்படம் ஆகவும் வரும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்