நடிகர் கமல்ஹாசன் நடனத்தில் மிகவும் தேர்ந்தெடுத்த ஒரு கலைஞர் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களுக்கே தெரியும். அவர் சினிமாவிற்குள் வந்ததே நடன கலைஞராக தான். ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனம் ஆட கற்றுத் தந்தவர். சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் அவரது நடன திறமை தெரியும்.
நடிகர் கமல்ஹாசனின் குருநாதர் கே பாலச்சந்தர்தான். அவரது மறைவுக்கு பிறகும் தனது குருநாதர் கே பாலச்சந்தர் தான் என்று நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்த் மேடைதோறும் குருவின் பெருமையை பேசி வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் அந்த நடிகையுடன் நான் நடனம் ஆட மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் மறுத்த தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான படம் மனதில் உறுதி வேண்டும். இது அவரது திரைபயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம் ஆகும். அரங்கேற்றம் அவள் ஒரு தொடர்கதை அபூர்வ ராகங்கள் அவர்கள் அக்னி சாட்சி போன்ற படங்களில் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதைக்கரு இருந்தது.
அந்த படங்களின் வரிசையில் மனதில் உறுதி வேண்டும் படமும் மிக முக்கியமானது. அதில் நந்தினி கேரக்டரில் நடித்து பெயர் வாங்கியவர் நடிகை சுஹாசினி. தனது குடும்பத்திற்காக தன்னை தியாகம் செய்யும் ஒரு நர்ஸின் கதை இது. இந்த படத்தில் தான் லலிதா குமாரி விவேக் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட சிலர் அறிமுகமானவர்கள். இந்த படத்தில் வேலைக்கார பெண்ணாக வரும் லலிதா குமாரி தீவிர சினிமா ரசிகையாக இருப்பார்.
சுஹாசினிக்கு காதல் வரும்போது அவரது காதலன் எப்படி இருப்பார் என்பதை லலிதா குமாரி கற்பனை செய்வது போன்ற ஒரு பாடல் காட்சி வரும். வங்காளக் கடலே இங்க உன் ஆசை விடலே என்ற அந்த பாடல் காட்சியில் சுஹாசினிக்கு ஜோடியாக ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் ஆகியோர் கனவில் வந்து சுஹாசினியுடன் நடனமாடி இருப்பார்கள். அதை கற்பனையாக லலிதா குமாரி நினைத்து ரசிப்பார்.
அந்த பாடல் காட்சியில் நடிகர் கமல்ஹாசனும் நடனம் ஆடுவதாக இருந்தது. ஆனால் சுஹாசினி நடிகர் கமல்ஹாசனின் சொந்த அண்ணன் சாருஹாசனின் மகள். சுஹாசினிக்கு கமல் சித்தப்பா என்பதால் என்ன இருந்தாலும் நிஜத்தில் அண்ணன் மகளுடன் எப்படி டூயட் பாடி ஆட முடியும் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மறுத்துவிட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.





