- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களுக்கு வாழ்த்துகளை சொன்ன நடிகர் ரஜினிகாந்த், பொங்கல் பரிசாக தலைவர் 173 படம் குறித்த லேட்டஸ்ட்...

ரசிகர்களுக்கு வாழ்த்துகளை சொன்ன நடிகர் ரஜினிகாந்த், பொங்கல் பரிசாக தலைவர் 173 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தந்த சூப்பர் ஸ்டார்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர் சி இந்த படத்தை இயக்கவில்லை என்று கூறி வெளியேறி விட்டதால் பல இயக்குனர்களிடம் ரஜினிகாந்த் கதை கேட்டார். அதில் எச் வினோத் அஸ்வத் மாரிமுத்து அருண்குமார் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கதைகளை கேட்ட ரஜினிகாந்த் அவர்கள் யாரையும் ஓகே செய்யவில்லை.

இந்த நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் தலைவர் 173 படத்தின் இயக்குனர் என்பது கடந்த வாரத்தில் அதிகாரபூர்வமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வருகிற 2027ம் ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான தீபாவளி பொங்கல் புத்தாண்டு விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு விடுவது வழக்கம். அப்போது வீட்டில் இருந்தால் ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பார். அவர்களுக்கும் வாழ்த்துகளை கூறுவார்.

அந்த வகையில் தை பொங்கல் முதல் நாளான இன்று ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் இன்று காலை திரண்டு நின்று இருந்தனர். வெள்ளை வேட்டி முழுக்கை வெள்ளை சட்டை கண்ணாடி அணிந்த நிலையில் வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். கை எடுத்து கும்பிட்டபடி ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை கூறினார். அப்போது தலைவா தலைவா என்று ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

அங்கு இருந்த செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நல்லா இருக்கணும். முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவங்க சந்தோஷமா ஹேப்பியா இருந்தால்தான் எல்லோரும் ஹேப்பியா இருப்பாங்க. நன்றி. என்னோட அடுத்த படம் ஏப்ரலில் இருந்து ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. கமர்ஷியல் எண்டர்டெயின்ட்மென்ட் பிக்சராக படம் இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் அப்போது கூறினார்.

சற்று முன்