- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் ரசிகர்களை குஷிப்படுத்தும் லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு… சிம்புவின் அடுத்த படம்… இயக்கப் போவது அந்த...

எஸ்டிஆர் ரசிகர்களை குஷிப்படுத்தும் லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு… சிம்புவின் அடுத்த படம்… இயக்கப் போவது அந்த மாஸ் டைரக்டர் தான்!

- Advertisement -

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. அதனால் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருந்த திட்டத்தை நடிகர் சிம்பு கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் கோவில்பட்டியில் பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இப்போது 2வது ஷெட்யூல் கோவில்பட்டியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா யோகேஸ்வரி போன்றவர்களும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

- Advertisement -

வடசென்னை படம் போலவே இந்த அரசன் படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஏற்கனவே வடசென்னை படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு சிம்பு நடிக்க முடியாமல் போனதால் தான் நடிகர் தனுஷ் நடித்தார். அதனால் அரசன் படம் பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அரசன் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். இதையடுத்து தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தையும் தயாரிப்பாளர் தாணுவே தயாரிக்க உள்ளார். இந்த படத்தை டைரக்ட் செய்யப் போவது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தான். சிம்பு நடிக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவர் இயக்கிய சிக்கந்தர் தர்பார் படங்கள் மட்டுமே சரியாக போகவில்லை. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படமும் ஏஆர் முருகதாஸூக்கு கலவையான விமர்சனங்களை தான் பெற்றுத் தந்தது என்றாலும் துப்பாக்கி ரமணா கஜினி கத்தி தீனா போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்தவர் ஏஆர் முருகதாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசன் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். அதற்கு முன்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர் சிம்பு கமிட் ஆகியிருக்கிறார். அதனால் 2 படங்களில் எந்த படத்துக்கு முதலில் கால்ஷீட் தருவார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்